ETV Bharat / bharat

'குடியுரிமை திருத்தச் சட்டம்' பாஜகவுக்கு தேர்தல் லாபத்தை தருமா?

author img

By

Published : Jan 10, 2020, 11:29 PM IST

ஹைதராபாத்: குடியுரிமை திருத்தச் சட்டத்தின் மூலம் மதரீதயான பிளவைக் கொண்டு பாஜக, தேர்தல் அரசியல் லாபத்தை அறுவடை செய்யுமா என என சி.எஸ்.டி.எஸ் அமைப்பின் பேராசிரியர் சஞ்சய் குமார் எழுதியுள்ள கட்டுரையின் தமிழாக்கம் இதோ...

CAA
CAA

இந்துக்கள் - இஸ்லாமியர்களிடையே மத ரீதியான பிரிவினையை குடியுரிமை திருத்தச் சட்டம் மூலமாக உருவாக்கி, அதன்மூலம் தேர்தல் அரசியல் பலன்களை பாஜக அறுவடை செய்துவிடும் என எதிர்க்கட்சிகள் அச்சப்படுவதில் முக்கய காரணங்கள் உள்ளன.

ஆனால் எதிர்க்கட்சிகள் நினைப்பது போன்றும் பாஜக நம்புவது போன்றும் தேர்தல் அரசியல் பலன்களை பெறுவது பாஜக கையில் மட்டுமில்லை. பாஜகவுக்கான நன்மை என்பது இந்த சட்டத்திற்கு எதிர்க்கட்சிகளின் எதிர் நடவடிக்கைகளை பொறுத்தே அமையும். எதிர்க்கட்சிகள் இந்த சட்டத்திற்கு கூர்மையான எதிர்ப்பை காட்டும்பட்சத்தில் பாஜகவுக்கு கூடுதல் பலனும், மென்மையான எதிர்ப்பை காட்டும்பட்சத்தில் பாஜகவுக்கு குறைவான பலனும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காரணம், எதிர்க்கட்சிகள் கூர்மையான எதிர்ப்பை காட்டும்பட்சத்தில் மதரீதியாக வாக்குகள் பிளவுபட்டு அதன் பலன்களை பாஜக அறுவடை செய்யும். நாடு முழுவதும் கடுமையான போராட்டங்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நிகழ்ந்துவரும் போதிலும், பொது மக்களின் கணிசமான ஆதரவானது இச்சட்டத்திற்கு கிடைத்துள்ளது.

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசத்திலிருந்து இந்தியாவுக்கு சட்டவிரோதமாக குடியேறிய இஸ்லாமியர்களை திருப்பியனுப்ப இதற்கு ஆதரவு மனநிலையில் உள்ளவர்கள் பொது மக்கள் பலரும் விரும்பம் தெரிவிக்கின்றனர். பொது புத்திக்கு மத வேறுபாடு, சட்ட வரைவுகள் குறித்து அதிக கவனங்கள் இருப்பதில்லை.

சட்டதிருத்தம் மூலம் பாஜக அரசியல் செய்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டும் நிலையில், எதிர்க்கட்சிகள் சிறுபான்மை வாக்குவங்கி அரசியல் செய்வதாக பொதுமக்களின் பார்வைக்கு முன்வைக்கப்படுகிறது. இதன் மூலம் ஏற்படும் வாக்குப்பிரிவினை பாஜகவுக்கு சாதகமான பலன்களை உருவாக்கிவிடும். குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு கணிசமாக இருந்தாலும் அதே அளவுக்கான வாக்குகள் பாஜகவுக்கு கிடைக்குமான என்பது சந்தேகமே.

காரணம், 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 37 விழுக்காடு வாக்குடன் 303 இடங்களை பாஜக கைப்பற்றினாலும், விந்திய மலைக்கு அப்பால் கர்நாடகத்தை தவிர வேறு எங்கும் அக்கட்சியால் காலூன்ற முடியவில்லை.

புதிய குடியுரிமை திருத்தச் சட்டம், இஸ்லாமியர்களை கணிசமாக கொண்டுள்ள தென்மாநிலங்களான கேரளா, ஆந்திரா, தெலங்கனா ஆகிய மாநிலங்களில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. காரணம் மேற்கண்ட மாநிலங்கள் எதுவும் எல்லைப்பகுதிகளாக இல்லாததால் சட்டவிரோத குடியேற்றச் சிக்கலை சந்தித்ததில்லை.

தென்மாநிலங்களில் பாஜக தனது பரப்பை அதிகப்படுத்த முயற்சிகள் எடுத்தாலும், அதற்கு இந்த குடியுரிமை திருத்தச் சட்டம் பங்களிப்பை தராது. உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், பீகார், ஜார்கண்ட் ஆகிய பகுதிகளில் பெரும் போராட்டங்களை இஸ்லாமியர்கள் முன்னெடுத்தாலும் அந்த போராட்டங்கள் காவல் துறை மூலம் தடுக்கப்பட்டது.

இச்சட்டதிற்கு எதிராக நாடு முழுவதும் பெரும் போராட்டங்கள் வெடித்தாலும், எல்லைப்பகுதிகள் இல்லாத மாநிலங்களில் இந்த போராட்டங்கள் விரைவில் வலுவிழக்கும். இந்த மாநிலங்களிலும் சட்ட விரோத குடியேற்றங்கள் அங்கங்கு தென்பாட்டாலும், அதன் எண்ணிக்கை குறைவு என்பதால் தாக்கம் குறைவே. 2014 மற்றும் 2019 ஆண்டு மக்களவைத் தேர்தலில் சிறப்பான வெற்றியை பெற்ற பாஜகவுக்கு இந்த சட்டத்தில் மூலம் தென்மாநிலங்களில் கிடைக்கும் லாபம் மிகக்குறைவே.

ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ஜார்கண்ட், உத்தரப் பிரதேசம், பீகார், குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் உள்ள மக்களவைத் தொகுதிகளை பெரும்பாலும் பாஜக தன்வசம் வைத்துள்ளது. இந்த மாநிலங்களில் பாஜக குடியுரிமை சட்டம் மூலம் வாக்கு எண்ணிக்கையை மேலும் உயர்த்தவது கடினமே.

அதேவேளை அசாம், மேற்குவங்க மாநிலங்களில் இந்த சட்டம் முக்கியத் தாக்கத்தை ஏற்படுத்தலாம். 55 மக்களவைத் தொகுதிகளைக் கொண்டுள்ள இந்த இரு மாநிலங்களிலும் பாஜக தனது கால்தடத்தை தற்போது பதிக்கத் தொடங்கியுள்ளது. 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அசாமில் 36 விழுக்காடு வாக்குடன் 9 இடங்களையும், மேற்கு வங்கத்தில் 40 விழுக்காடு வாக்குடன் 18 இடங்களையும் பாஜக கைப்பற்றியது. இச்சட்டத்தின் மூலம் இந்த இரு மாநிலங்களிலும் தனது பலத்தை அதிகரிக்கும் நம்பிக்கையை பாஜக கொண்டுள்ளது.

இச்சட்டத்திற்கு எதிராக அசாமில் பெரும் போராட்டம் வெடித்த நிலையில், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா இச்சட்டத்தை நேரடியாகவே எதிர்கிறார். வங்கதேசத்துடன் எல்லையை பகிர்ந்துள்ள இந்த இரு மாநிலங்களில் சட்ட விரோதமாக இஸ்லாமியர்கள் பலர் குடியேறியுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

இந்த இரு மாநிலங்களும் அடுத்த ஆண்டில் சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கவுள்ளன என்பது கவனிக்க வேண்டிய அம்சம். இந்த இரு மாநிலத் தேர்தலில் பாஜகவின் கணக்குகள் எப்படி பலன் அளிக்கும் என்பதையும், 2024 ஆம் ஆண்டு நடக்கப் போகும் மக்களவைத் தேர்தலில் இது எவ்வாறு எதிரொலிக்கும் என்பதை காலம்தான் பதில் சொல்லும்.

இதையும் படிங்க: மோடியின் வெளியுறவுக் கொள்கையின் புதிய ஆயுதம்...!

Intro:Body:

CAA editorial

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.