ETV Bharat / bharat

பழங்குடிகள் வாழ்வில் மாற்றம் தந்த ‘மால்வாவின் அன்னை தெரசா’ - Mother therasa of malwa

போபால்: பெண்கள் தினத்தை முன்னிட்டு நமது ஈடிவி பாரத் ஊடகம் நாடு அறிந்திராத சாதனைப் பெண்களின் வாழ்க்கையைத் தொடர்ச்சியாக வழங்கிவருகிறது. மத்தியப் பிரதேச மாநிலத்தின் மால்வா பகுதியில் உள்ள பழங்குடி மக்கள் வாழ்வில் மாற்றத்தைக் கொண்டுவந்த சாதனைப் பெண் லீலா ஜோஷியின் வாழ்க்கை குறித்த சிறப்புத் தொகுப்பு இதோ...

Mp
Mp
author img

By

Published : Mar 3, 2020, 12:18 PM IST

மத்தியப் பிரதேச மாநிலம், இரத்லாமில் வசிக்கும் மருத்துவர் லீலா ஜோஷி. இவருக்கு அப்பகுதி மக்கள் சூட்டிய பெயர், 'மால்வாவின் அன்னை தெரசா'. அர்ப்பணிப்பு உணர்வுகொண்ட இந்த மருத்துவர், அந்த வட்டாரத்தில் வசிக்கும் பழங்குடியினரின் பகுதிகளில் உள்ள பெண்களுக்கு (ரத்த சோகை) ரத்தப் பற்றாக்குறை பிரச்னைக்கு இலவசமாக சிகிச்சையளித்து மக்களிடம் விழிப்புணர்வுப் பரப்புரையை மேற்கொண்டுவருகிறார்.

ரத்த சோகைக்கு எதிரான அவரது வெற்றிகரமான சமூக செயல்பாட்டை அங்கீகரிக்கும்வகையில் அவருக்கு 'பத்ம ஸ்ரீ' விருது வழங்க இந்திய அரசு முடிவுசெய்தது.

லீலா ஜோஷி நமது ஈடிவி பாரத்துக்கு அளித்த சிறப்புப் பேட்டியில், பல்வேறு அம்சங்களைக் குறிப்பிட்ட அவர், அனைவரும் நலத்துடன் இருப்பதற்கான மிக முக்கியமான விவரத்தையும் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

நலவாழ்வுத் துறைக்கு இணையற்ற பங்களிப்பு

1997ஆம் ஆண்டில் மருத்துவர் லீலா ஜோஷிக்கு அன்னை தெரசாவைச் சந்திப்பதற்கான ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. அச்சந்திப்பின் தாக்கத்தால் மருத்துவர் லீலா, பழங்குடியினர் பகுதிகளில் வசிக்கும் பெண்களில் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க சிறப்பு முகாம்களை நடத்தினார். மருத்துவர் லீலாவின் அயராத முயற்சிகள், ஒப்பிடமுடியாத பங்களிப்பு ஆகியவற்றால், அவர், 2015ஆம் ஆண்டில், பெண்கள், குழந்தைகள் நலத் துறை வெளியிட்ட 'செல்வாக்குமிக்க 100 பெண் புள்ளிகள்' பட்டியலில் இடம்பிடித்தார். அதைத் தொடர்ந்து, இப்போது அவருக்கு 2020ஆம் ஆண்டில் பத்ம ஸ்ரீ விருது வழங்கப்படுகிறது.

‘அரசுத் திட்டங்கள் நன்கு செயல்படுத்தப்படவேண்டும்’

சிறப்பு மருத்துவமாக, மகளிர் மருத்துவ வல்லுநரான மருத்துவர் லீலா இருப்புப் பாதைப் போக்குவரத்துத் துறையில் தலைமை மருத்துவ இயக்குநராகப் பணியாற்றி ஓய்வுபெற்றார். அரசானது எப்போதும் மக்களின் நலனுக்காகவே திட்டங்களை உருவாக்குகிறது; ஆனால் அவற்றில் பெரும்பாலானவை எப்படி செயல்படுத்தப்பட வேண்டுமோ அப்படி செய்யப்படுவது இல்லை. இதைக் கண்ட மருத்துவர் லீலா, பலனுள்ள திட்டங்களை உருவாக்கி, செயல்படுத்தவேண்டுமென ஆலோசனையை முன்வைத்தார். சமூக சேவையில் தீவிரமாகப் பங்கேற்க வேண்டுமென்றால் சலுகைபெற்ற வர்க்கப் பிரிவினர் அதில் ஈடுபடலாம் என்ற கருத்தையும் அவர் முன்வைக்கிறார்.

பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள வேண்டும்

சமூகத்தில் உள்ள பெண்களுக்கு ஒரு சிறப்புச் செய்தியாக அனுபவம்வாய்ந்த மருத்துவரான அவர் கூறுவது இதுதான், ”பெண்கள் தங்கள் குடும்பத்தினரை மட்டுமல்ல, தங்களுடைய நலத்தையும் அவசியமாக கவனமெடுத்துக்கொள்ள வேண்டும். மேலும், பெண் பிள்ளைகளின் ஆரோக்கியமான, பாதுகாப்பான எதிர்காலத்துக்காக அவர்களுக்கு நல்ல ஊட்டச்சத்து உணவுகளைக் கொடுக்கவேண்டும்”.

இதையும் படிங்க: ஈரானை அச்சுறுத்தும் கொரோனா, முக்கியத் தலைவர் பலி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.