ETV Bharat / bharat

தென்னாப்பிரிக்க மக்களின் உரிமைக்குரலாக ஒலித்த 'இந்தியன் ஒப்பீனியன்' - காந்தி நவஜீவன் ஹரிஜன்

காந்தியின் 150ஆவது பிறந்தநாள் நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ள நிலையில் காந்தி நடத்திய முதல் பத்திரிகையான இந்தியன் ஒப்பீனியன் குறித்து பேராசிரியர் சமர் தலிவால் நமது ஈடிவி பாரத் செய்திக்கு எழுதிய சிறப்புக் கட்டுரை இதோ...

காந்தி
author img

By

Published : Sep 26, 2019, 10:02 AM IST

Updated : Sep 26, 2019, 12:05 PM IST

இந்திய விடுதலைப் போராட்டம் தொடங்கிய காலகட்டத்தில் இந்திய மக்களை ஒன்று திரட்டி, தேசிய சிந்தனைகளைப் புகுத்துவதற்கான தேவை அன்றிருந்தது. இந்தத் தேவையை பூர்த்தி செய்யும் கருவியாக அன்றைய அச்சு ஊடகம் இருந்தது. இந்தியாவின் சக்திவாய்ந்த ஊடகங்களும் அச்சமற்ற ஊடகவியலாளர்களும் அக்காலகட்டத்தில்தான் உருவாகத் தொடங்கினர்.

சொல்லப்போனால், செய்தித்தாள்களில் அன்று கட்டுரைகள் எழுதாத இந்திய விடுதலைப் போராட்டத் தலைவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

தனது தென்னாப்பிரிக்க நாட்களிலிருந்தே பத்திரிகையாளராகச் செயல்பட்டுவந்தார் காந்தி. 1903ஆம் ஆண்டு பத்திரிகை வாழ்க்கையைத் தொடங்கிய காந்தி, சுமார் 45 ஆண்டுகள் பல்வேறு விவகாரங்கள் குறித்து தனது தெளிவான பார்வையை முன்வைத்துள்ளார்.

தனது தாய் மொழியான குஜராத்தி, ஆங்கிலம், சில இந்திய மொழிகளில் தொடர்ச்சியாக எழுதிவந்த காந்தி, காலம் செல்லச்செல்ல தன்னை மெருகேற்றிக் கொண்டார் எனலாம். இந்தியன் ஒப்பீனியன் என்ற பெயரில் தனது முதல் பத்திரிகையைத் தொடங்கிய காந்தி, பின்னாளில் நவஜீவன், ஹரிஜன், சில பத்திரிகைகளை நடத்தினார்.

1903ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் உள்ள டர்பனில் இந்தியன் ஒப்பீனியனை தொடங்கிய காந்தி, அங்குள்ள இந்தியர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள், அவர்களின் தேவைகள், மேற்கொள்ள வேண்டிய சீர்த்திருத்தங்கள் ஆகியவற்றைத் தொடர்ச்சியாக எழுதிவந்தார். இந்தப் பத்திரிகை இந்திய மக்களுக்கு அறிவியக்கமாக மாறி அன்றாட நிகழ்வுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

Gandhi 150
மும்முரமான எழுத்துப்பணியில் காந்தி

1903ஜூன் 4ஆம் தேதி இந்தியன் ஒப்பீனியனின் முதல் பதிப்பு வெளியானது. தொடங்கப்பட்ட காலகட்டத்திலேயே ஆங்கிலம், இந்தி, குஜராத்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் இந்தியன் ஒப்பீனியன் வெளியானது. இந்தியன் ஒப்பீனியன் பத்திரிகையை காந்தி சிறப்பாக நடத்துவதற்கு எம்.ஹெச். நசார், மதன்ஜித் என்ற இருவர் உற்ற துணையாக இருந்தனர். குறிப்பாக, பத்திரிகையின் ஆக்கங்கள், கொள்கை முடிவுகளைத் தீர்மானித்தல் போன்றவற்றை எம்.எச். நசார் மேற்கொண்டார்.

இந்தியன் ஒப்பீனியன் தனது சீரிய கருத்துகள் மூலம் தென்னாப்பிரிக்க இந்தியர்களிடையே வேகமாகச் சென்றடைந்தது. காந்திக்கு முன்னதாகவே இந்தியர்கள் சிலர், தென்னாப்பிரிக்காவில் பத்திரிகை தொடங்கிய போதும் வெகுஜன மக்களிடம் சென்றடைந்த பெருமை இந்தியன் ஒப்பீனியனையே சாரும். சமூக, வரலாற்று, அரசியல் தளங்களில் இந்தியன் ஒப்பீனியன் முக்கிய சக்தியாக உருவெடுத்தது.

தென்னாப்பிரிக்கப் போருக்குப் பிறகு அங்குள்ள கறுப்பின மக்கள் ஆங்கிலேய ஆதிக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக அவர்களின் சமூக, பொருளாதார, அரசியல் உரிமைகள் வெள்ளையர்களால் மறுக்கப்பட்டன. மறுக்கப்பட உரிமைகளுக்கான குரலாக இந்தியன் ஒப்பீனியன் ஒலிக்கத் தொடங்கியது.

மேலும் தென்னாப்பிரிக்க கறுப்பின மக்களிடம் ஆங்கிலேயர்கள் மேற்கொண்ட அடக்குமுறை சுமந்து நிற்கும் வரலாற்று ஆவணமாகத் திகழ்ந்தது இந்தியன் ஒப்பீனியன். தால்ஸ்தோய், தோரோ, ஜான் ரஸ்கின் உள்ளிட்ட சிந்தனையாளர்களின் கருத்துகளைப் பத்திரிகையின் மூலம் மக்களுக்குக் கொண்டுசென்றார் காந்தி.

தனது சத்தியாகிரகப் போராட்டத்தை மக்களிடம் கொண்டுசெல்வதற்கு முக்கிய கருவியாக இந்தியன் ஒப்பீனியன் திகழ்ந்தது என்று காந்தியே பலமுறை தெரிவித்துள்ளார். காலணி ஆதிக்கத்திற்கு எதிராகவும் நிறவெறிக்கு எதிராகவும் அடக்குமுறைக்கு எதிராகவும் குரல் கொடுத்த இந்தியன் ஒப்பீனியன், காந்தியின் மறைவுக்குப்பிறகும் சில ஆண்டுகள் செயல்பட்டுவந்தது.

Gandhi 150
போராட்டக் களத்தில் காந்தி

காந்தியின் இரண்டாவது மகனான மணிலால், 1950களில் இந்தியன் ஒப்பீனியனின் பொறுப்புகளைக் கையிலெடுத்துக்கொண்டார். அதன் பின்னர் சுமார் 10 ஆண்டுகள் இந்தியன் ஒப்பீனியன் தென்னாப்பிரிக்க கறுப்பின மக்களின் உரிமைக் குரலாகத் தொடர்ந்து ஒலித்துவந்தது.1961ஆம் ஆண்டு மணிலாலின் மறைவின் காரணமாக அந்தாண்டு ஆகஸ்ட் 4ஆம் தேதி இந்தியன் ஒப்பீனியனின் இறுதி பதிப்பு வெளிவந்தது.

தனது வாழ்நாளில் சமூகப் போராளியாக அரசியல் தளத்தில் நேர்மையுடன் செயல்பட்டுவந்த காந்தி, அதே துடிப்புடன் பத்திரிகைத் துறையிலும் பணியாற்றினார் என்பதற்குச் சாட்சியாக அவரின் இந்தியன் ஒப்பீனியன் பத்திரிகையே சாட்சி.

Intro:Body:Conclusion:
Last Updated : Sep 26, 2019, 12:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.