அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசியச் செயலாளர் சஞ்சய் தத் புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "கடந்த ஆண்டுகளைவிட தற்போது தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கு எதிரான குற்றங்கள் 9 விழுக்காடு அதிகரித்துள்ளது.
மேலும், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களின் இட ஒதுக்கீட்டிற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மத்திய பாஜக அரசை இந்துத்துவா அமைப்புகள்தான் இயக்குகிறது என்பது உறுதியாகியுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறமுடியாது என பிரதமர் தெரிவித்திருப்பதன் மூலம் அவர் ஒரு சர்வாதிகாரி என்பது நிரூபணமாகியுள்ளது.
தற்போது கொரோனாவைவிட கொடூரமான வைரஸ் நாட்டின் பொருளாதாரத்தை பாதித்துள்ளது. இதுகுறித்து பிரதமர் கவலைப்படுவதே இல்லை. இந்தியாவிலேயே குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் இயற்றிய முதல் யூனியன் பிரதேசம் புதுச்சேரி யூனியன் பிரதேசம்தான். அதற்காக புதுச்சேரி அரசுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.
இதையும் படிங்க: ஏழு தமிழர் விடுதலையை வலியுறுத்தி மதுரை ஆட்சியர் அலுவலகம் முற்றுகை