புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் பாஜக மாநில பொருளாளரும், நியமன சட்டப்பேரவை உறுப்பினருமான கே.ஜி. சங்கர் (70) இன்று (ஜன.17) காலை மாரடைப்பால் உயிரிழந்தார். இவரது உடலுக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் சிவக்கொழுந்து ஆகியோர் உயிரிழந்த சங்கருக்கு மாலை அணிவித்து, அஞ்சலி செலுத்தினர். பின்னர், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இதையடுத்து, பாஜக தலைவர் சுவாமிநாதன், சங்கருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதையும் படிங்க: புதுச்சேரியில் பாஜக நியமன எம்எல்ஏ காலமானார்