ETV Bharat / bharat

இயற்கை அன்னைக்கு என்ன தரப்போகிறோம்?

author img

By

Published : Dec 13, 2019, 7:43 AM IST

சர்வதேச அளவில் ஒரு மனிதனக்கு 422 மரங்கள் என்ற சராசரி உள்ளது. ஆனால், இந்தியாவில் ஒரு மனிதனுக்கு 28 மரங்கள்தான் இருக்கின்றன. மிகவும் வேதனை தரக் கூடிய உண்மை என்னவென்றால் நாட்டின் பொருளாதார தலைநகராக இருக்கும் மும்பையில் ஒரு மனிதனுக்கு 4 மரங்கள் மட்டுமே உள்ளன.

The Challenge of Giving Back to Mother Nature

தன்னலமற்ற தன்மையையும் தியாகத்தையும் நமக்குக் கற்பிப்பதில் மரங்களே சிறந்த ஆசிரியர்களாக திகழ்கின்றன.

- ஜந்தியால பாப்பய்யா சாஸ்திரி

சேவை செய்வதிலும், சுயநலமற்று உதவுவதிலும் சிறந்து விளங்கும் வாழும் உதாரணங்களை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? அவை வேறெதுவும் அல்ல; மரங்கள்தான். உலகில் உள்ள அனைத்து உயிர்களும் உயிர் வாழ ஆக்ஸிஜன் தேவை. அதை மரங்கள்தான் வழங்கிக் கொண்டிருக்கின்றன. அதுமட்டுமா? கனிகள், இலைகள், மருத்துவப் பொருட்கள் என மனிதர்களுக்குத் தேவையான பலவற்றை மரங்கள் வழங்கிக் கொண்டிருக்கின்றன.

பூமியில் மரங்கள்தான் உயிர்களுக்கு ஆதாரம். மரங்கள் இருப்பதால்தான் பல்வேறு உயிர்கள் இருக்கின்றன என்று சொன்னால் அது மிகையாகாது.

எல்லா உயிர்களையும் இயற்கையையும் வணங்கும் பாரம்பரியம் கொண்ட நாடு இந்தியா. இருந்தும் மரங்கள் அதிகம் வெட்டப்படும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருப்பதை நாம் அமைதியாக பார்த்துக்கொண்டிருக்கிறோம். அதுமட்டுமல்ல, மரங்கள் குறைவாக உள்ள நாடுகளில் ஒன்றாகவும் நமது நாடு இருக்கிறது.

இதுபோன்ற ஒரு காலகட்டத்தில் பசுமையை மீட்பதற்காக ‘Green-India Challenge’ போன்ற அமைப்புகள் இருப்பது நமக்கு கிடைத்துள்ள வரப்பிரசாதம் என்றுதான் சொல்ல வேண்டும். பள்ளிக் குழந்தைகள், அரசியல்வாதிகள், அதிகாரம் மிக்க உயர் அதிகாரிகள், பிரபலங்கள், சாதாரண மக்கள் உள்பட சமூகத்தின் அனைத்துத் தரப்பினருடனும் சேர்ந்து, பசுமை பரப்பை அதிகப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை காலத்தின் தேவையை கருத்தில் கொண்டு, இந்த அமைப்பு செய்து ஏற்படுத்தி வருகிறது.

இந்திய துணைக்கண்டம், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பல்வேறு வகையான காடுகளைக் கொண்டிருக்கிறது. பல்வேறு வகையான உயிர்கள் இவற்றில் வாழ்கின்றன. இயற்கை நமக்கு கொடுத்துள்ள மிகப்பெரிய கொடை இது. எனினும், இங்குள்ள மனிதர்களின் எண்ணிக்கையையும், மரங்களின் எண்ணிக்கையையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது நமக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.

சர்வதேச அளவில் ஒரு மனிதனக்கு 422 மரங்கள் என்ற சராசரி உள்ளது. ஆனால், இந்தியாவில் ஒரு மனிதனுக்கு 28 மரங்கள்தான் இருக்கின்றன. மிகவும் வேதனை தரக்கூடிய உண்மை என்னவென்றால் நாட்டின் பொருளாதார தலைநகராக இருக்கும் மும்பையில் ஒரு மனிதனுக்கு 4 மரங்கள் மட்டுமே உள்ளன.

முற்றிலும் பசுமையான மற்றும் தூய்மையான நாடுகளின் பட்டியலில் கனடா முதலிடத்தில் உள்ளது. இங்கு ஒரு மனிதனுக்கு 8,953 மரங்கள் என்ற விகிதத்தில் மரங்கள் அடர்ந்து காணப்படுகின்றன. கனடாவுக்கு அடுத்ததாக ரஷ்யா, ஒரு மனிதனுக்கு 4,461 மரங்கள் என்ற விகிதத்தில் இரண்டாவது இடத்திலும், ஒரு மனிதனுக்கு 3,266 மரங்கள் என்ற விகிதத்தில் ஆஸ்திரேலியா மூன்றாவது இடத்திலும் உள்ளன.

பசுமை பரப்பு ஒவ்வொரு நாட்டிலும் வேறுபடுவதற்கு, அரசின் கொள்கை முடிவுகள் ஏற்படுத்தும் பாதிப்பு, மரங்களின் முக்கியத்துவத்தை உணராமல் மக்கள் அவற்றை வெட்டுவது, மரம் வளர்ப்பதில் முனைப்பு காட்டாமல் இருப்பது என பல்வேறு காரணிகள் இருக்கின்றன. இதுபோன்ற காரணிகள்தான் கவலையை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. வனங்கள் அழிக்கப்படுவதற்கு நாம் முடிவு கட்டியே ஆக வேண்டும்.

காடுகள் 1

காடுகள் அழிக்கப்படுவதும், புதிதாக மரங்கள் வளர்க்கப்படாததும் இந்தியாவிற்கு மட்டுமே உள்ள கவலை அல்ல. உலகின் பல நாடுகளுக்கும் இத்தகைய கவலை இருக்கிறது. ஆனால், ஒப்பீட்டளவில் இங்கேதான் அதிக அளவில் காடுகள் அழிக்கப்படுகின்றன. அதுதான் நமக்கு கவலையை அதிகரிக்கச் செய்கிறது.

அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வு, பூமியில் சுமார் 1000 கோடி ஹெக்டேர் நிலப்பரப்புக்கு மரங்கள் வளர்க்கப்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கிறது. இருந்தும், 1990க்குப் பிறகு 12.90 கோடி ஹெக்டேர் பரப்பளவிலான காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. இதுதான் அதிர்ச்சியை அளித்துக்கொண்டிருக்கிறது.

இதையும் படிங்க: வீழ்கிறதா மோடி - அமித் ஷா இணை?

மரங்களை வெட்டி கடத்துவது, காடுகளில் ஏற்படும் தீ, காடுகளை அழித்து தொழிற்சாலைகளை அமைப்பது, விவசாயத்திற்காக காடுகளை அழிப்பது, மனிதர்கள் செய்யும் தவறுகள் என காடுகள் அழிக்கப்படுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. சுமார் 90 கோடி மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக காடுகளை நம்பியிருக்கிறார்கள்.

இந்தியாவில் அதிக விகிதத்தில் காடுகள் அழிக்கப்படுகின்றன. 1988 ஆம் ஆண்டின் தேசிய வனக் கொள்கையின்படி, இந்தியாவில் மூன்றில் ஒரு பங்கு நிலம் காடாக இருக்க வேண்டும். ஆனால், தற்போதோ 4-ல் ஒரு பங்கு நிலம்தான்( 24.39 சதவீதம் ) காடாக இருக்கிறது.

2017 ஆம் ஆண்டில் இந்திய வன ஆய்வு அமைப்பு சமர்ப்பித்த ஒரு கணக்கெடுப்பு அறிக்கையில், காடழிப்பு ஆண்டுதோறும் வேகமாக அதிகரித்து வருகிறது. நம் ஒவ்வொருவரின் கண்களுக்கு முன்பாகவும் காடுகள் வேகமாக அழிக்கப்பட்டு வருகின்றன. நாட்டின் மற்ற பகுதிகளோடு ஒப்பிடுகையில் ஆந்திராவிலும் தெலங்கானாவிலும் இது அதிகமாகவே இருக்கிறது.

தெலங்கானா தலைநகரான ஹைதராபாத், பசுமை தோட்டங்களும், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளும் நிறைந்த சுற்றுச்சூழலுக்கு பெயர் பெற்றது. துரதிர்ஷ்டவசமாக, இந்த நகரம்கூட இன்று காடழிப்பின் பிடியில் உள்ளது. பசுமைப் பரப்பில் கிட்டத்தட்ட 60 சதவீதத்தை அது இழந்துவிட்டது.

காடுகள் அழிக்கப்படுவதால் ஆஸ்துமா போன்ற சுவாசப் பிரச்சினைகள் அதிகரிக்கின்றன. அதுமட்டுமல்ல, பருவநிலை மாற்றத்தையும் அது ஏற்படுத்துகிறது. இதனால், பருவத்தில் மழை பெய்வது பாதிக்கப்படுகிறது. விவசாயம் பாதிக்கப்படுகிறது. இயற்கைச் சூழல் பாதிக்கப்பட்டு, உணவுக்காகவும், தண்ணீருக்காகவும் காடுகளைவிட்டு மிருகங்கள் ஊருக்குள் வருவது அதிகரிக்கிறது. பருவத்தே மழை பெய்ய வேண்டியது அவசியம். அதற்கு காடுகள் அவசியம். அதோடு, ஆக்ஸிஜன் மிகமிக அவசியம்.

காலியாகும் மரங்கள்

முழுமையாக வளர்ந்த ஒரு மரம் ஆண்டுக்கு ரூ. 24 லட்சம் மதிப்புள்ள ஆக்ஸிஜனை நமக்கு வழங்குகிறது. அதோடு, சுமார் 0.53 டன் கார்பன்-டை-ஆக்சைடு மற்றும் சுமார் 1.95 கிலோ பிற மாசுகளை அது உள்ளிழுத்துக்கொள்கிறது. ஆரோக்கியமான ஒரு நபர் ஒரு நாளைக்கு சுமார் 3 சிலிண்டர் ஆக்ஸிஜனை சுவாசிக்கிறார். அவர் வாழ்நாள் முழுவதும் ஆக்ஸிஜனை உள்ளிழுக்க குறைந்தபட்சம் 3 மரங்கள் தேவை. நட்பாகவும், அன்பாகவும் பழகத் தெரிந்தவன் மனிதன். ஆனால், மனிதர்களுக்கு ஆதாரமாக இருக்கும் மரங்களிடம் நாம் அன்பாகவும், அக்கறையாகவும் இருக்கிறோமா?

மரங்களை பாதுகாப்பது, வளர்ப்பது ஆகியவற்றில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒற்றை நோக்கோடு ‘Green India Challenge’ அமைப்பு செயல்பட்டு வருகிறது. ஒவ்வொருவரும் தங்கள் வாழ்நாளில் 3 மரங்களையாவது வளர்ப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனும் இலக்கோடு ‘Green India Challenge’ அமைப்பு பாடுபட்டு வருகிறது.

இதையும் படிங்க: தடம் புரளும் இந்திய ரயில்வே!

இதன் மூலம் மனிதர்கள் இயற்கையின் பலனை அனுபவிப்பவர்களாக மட்டுமல்லாமல், இயற்கைக்குத் திருப்பிக் கொடுக்கக் கூடியவர்களாகவும் உருவாவார்கள். மாணவர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், தொழில்வல்லுநர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ் அதிகாரிகள், அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள், பத்திரிகையாளர்கள், திரை பிரபலங்கள், பொது மக்கள் என பலரது ஒத்துழைப்புடன் இதுவரை சுமார் 3.5 கோடி மரங்கள் நடப்பட்டுள்ளன.

‘Green India Challenge’ – ன் இந்த முயற்சியில் பல்வேறு தொழில் அமைப்புகளும், நிறுவனங்களும் கரம் கோர்த்திருக்கிறார்கள். இதன்மூலம், அரசாங்கத்தின் உதவி இன்றி, இந்த அமைப்பு 38 நாடுகளில் பசுமையை அதிகரிக்க பாடுபட்டு வருகிறது. நல்ல நோக்கங்களுடன் ஒரு நிறுவனம் எவ்வாறு சிறப்பாக இயங்க முடியும் என்பதற்கு இந்நிறுவனம் ஒரு உதாரணமாகவும் விளங்கி வருகிறது.

அரசு, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள் என அனைவரையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவருவதற்கான முயற்சியில் ‘Green India Challenge’ ஈடுபட்டு வருகிறது. இதன்மூலம் கூட்டுப் பொறுப்புணர்வை உணர்ந்து அனைவரும் இணைந்து செயல்படவும், தூய்மையான காற்றை சுவாசிப்பதற்கான இலக்கை எட்டவும் முடியும். அதோடு, மனித சமூகத்தின் வாழ்க்கையை எளிதாக்கவும் முடியும்.

வெட்டி வீசப்படும் மரங்கள்

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அக்கறை கொண்டுள்ள தெலங்கானா அரசு இதற்காக ‘ஹரித ஹராம்’ என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இதேபோல், ஆந்திர அரசும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளது. இந்த முயற்சிகள் அனைத்தையும் வெற்றிபெற வைக்க வேண்டிய கடமை நம் அனைவருக்கும் இருக்கிறது. இதற்காக, இளைஞர்களும் மாணவர்களும் பாடுபடவேண்டும். இந்த திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்த வேண்டும். எவ்வளவு மரங்கள் நடுகிறோம் என்பதைவிட எவ்வளவு மரங்களை நன்றாக பராமரிக்கிறோம் என்பதே முக்கியம். இவ்விஷயத்தில் உள்ளூர் அமைப்புகள், கல்லூரிகள், பள்ளிகள் உதவ முடியும்.

மாநகரங்களில் புதிய பூங்காக்களை ஏற்படுத்துவதற்கும், அவற்றை நன்கு பராமரிப்பதற்கும் நிதி ஒதுக்குவது மிகவும் முக்கியம். மரங்கள் குறைவாக காணப்படும் பகுதிகளுக்கு கூடுதல் கவனம் கொடுக்க வேண்டும். சுற்றுச்சூழல் மாசை குறைப்பதற்கு இவை பெருமளவில் உதவும்.

இதையும் படிங்க: முத்ரா திட்டமும், பொதுத்துறை வங்கிகளின் அலட்சியமும்!

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் தன்னலமின்றி பணிபுரியும் நபர்களையும், அமைப்புகளையும் அரசு அடையாளம் கண்டு அங்கீகரிக்க முன்வர வேண்டும். சுற்றுச்சூழலுக்காக பாடுபட்டு வரும் பல்வேறு அமைப்புகளும் கூடுதல் உறுதியுடன் களப்பணியாற்ற இது உதவும். ஏனெனில் மரங்களை வளர்ப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம்.

அஸ்ஸாமின் ஜோர்ஹட் எனும் சிறு நகரைச் சேர்ந்த சுற்றுச்சூழல் போராளியான ஜாதவ் மோலி பயெங், தற்போது இந்திய காடுகளின் தந்தையாக வர்ணிக்கப்படுகிறார். தனது நகருக்கு அருகில் சுமார் 1300 ஏக்கர் தரிசு நிலத்தில், தனி ஒரு நபராக மரங்களை நட்டு பராமரித்து இடைவிடாமல் உழைத்த உழைப்புக்காக அவர் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறார். தனது வாழ்க்கையில் 30 வருடங்களை அவர் இதற்காக தியாகம் செய்திருப்பது மற்றவர்களுக்கு உத்வேகம் அளிப்பதாக உள்ளது. அவரது இந்த செயல், ஜோர்ஹட் நகர மக்கள் பஞ்சம், பட்டினி மற்றும் பல்வேறு நோய்களில் இருந்து விடுபட உதவியுள்ளது. அதோடு, சுத்தமான காற்றையும் பசுமையான சுற்றுச்சூழலையும் அவர்கள் அனுபவித்து வர காரணமாக அமைந்துள்ளது.

காடுகள் 2

இதேபோல், தெலுங்கு சுற்றுச்சூழல் போராளி வனஜீவி ராமைய்யாவின் வாழ்க்கை, ஆந்திரா மற்றும் தெலங்கானா ஆகிய இரு மாநில மக்களுக்கும் உத்வேகத்தை அளித்து வருகிறது. தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தைச் சுற்றிலும் கனிகளையும் நிழலையும் தரும் சுமார் 1000 மரக்கன்றுகளை நட்டு வளர்த்தவர் ராமையா. தற்போது அவருக்கு வயது 80. இருந்தபோதும், மரங்களை நட்டு வளர்ப்பதில் இன்னமும் ஆர்வம் குறையாமல் பணிபுரிந்து வருகிறார். இதன் காரணமாக 6ம் வகுப்பு சமூக அறிவியல் பாடபுத்தகத்தில் அவரது வாழ்க்கை வரலாறு ஒரு பாடமாக அமைக்கப்பட்டுள்ளது.

நமக்காகவும், நமது எதிர்கால சந்ததியினருக்காகவும் பசுமை இந்தியாவை நாம் மீண்டும் உருவாக்க உறுதியேற்போம். இதற்காக அதிக அளவில் மரங்களை நடுவதற்கான சவாலை ஏற்போம். இன்றுவரை நமது நல்வாழ்விற்கு முக்கிய ஆதாரமாக விளங்கி வரும் இயற்கை அன்னைக்கு திருப்பித் தருவதற்கான சிறந்த வழி இதைவிட வேறு என்ன இருக்க முடியும்?

இதையும் படிங்க: தடம் மாறியதால் அதிகாரப்பசிக்கு இரையான பாஜக!

Intro:Body:

இயற்கை அன்னைக்கு என்ன தரப்போகிறோம்?

தாவரங்களை பாதுகாப்பதன் முக்கியத்துவம்: 

தன்னலமற்ற தன்மையையும் தியாகத்தையும் நமக்குக் கற்பிப்பதில் மரங்களே சிறந்த ஆசிரியர்களாக திகழ்கின்றன. 

- ஜந்தியால பாப்பய்யா சஸ்திரி

சேவை செய்வதிலும், சுயநலமற்று உதவுவதிலும் சிறந்து விளங்கும் வாழும் உதாரணங்களை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? அவை வேறெதுவும் அல்ல; மரங்கள்தான். உலகில் உள்ள அனைத்து உயிர்களும் உயிர் வாழ ஆக்ஸிஜன் தேவை. அதை மரங்கள்தான் வழங்கிக் கொண்டிருக்கின்றன. 

அதுமட்டுமா?

கனிகள், இலைகள், மருத்துவப் பொருட்கள் என மனிதர்களுக்குத் தேவையான பலவற்றை மரங்கள் வழங்கிக் கொண்டிருக்கின்றன. 

பூமியில் மரங்கள்தான் உயிர்களுக்கு ஆதாரம். மரங்கள் இருப்பதால்தான் பல்வேறு உயிர்கள் இருக்கின்றன என்று சொன்னால் அது மிகையாகாது. 

எல்லா உயிர்களையும் இயற்கையையும் வணங்கும் பாரம்பரியம் கொண்ட நாடு இந்தியா. இருந்தும் மரங்கள் அதிகம் வெட்டப்படும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருப்பதை நாம் அமைதியாக பார்த்துக்கொண்டிருக்கிறோம். அதுமட்டுமல்ல, மரங்கள் குறைவாக உள்ள நாடுகளில் ஒன்றாகவும் நமது நாடு இருக்கிறது.  

இதுபோன்ற ஒரு காலகட்டத்தில் பசுமையை மீட்பதற்காக ‘Green-India Challenge’ போன்ற அமைப்புகள் இருப்பது நமக்கு கிடைத்துள்ள வரப்பிரசாதம் என்றுதான் சொல்ல வேண்டும். பள்ளிக் குழந்தைகள், அரசியல்வாதிகள், அதிகாரம் மிக்க உயர் அதிகாரிகள், பிரபலங்கள், சாதாரண மக்கள் உள்பட சமூகத்தின் அனைத்துத் தரப்பினருடனும் சேர்ந்து, பசுமை பரப்பை அதிகப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை காலத்தின் தேவையை கருத்தில் கொண்டு,

இந்த அமைப்பு செய்து ஏற்படுத்தி வருகிறது. 

இந்திய துணைக் கண்டம், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பல்வேறு வகையான காடுகளைக் கொண்டிருக்கிறது. பல்வேறு வகையான உயிர்கள் இவற்றில் வாழ்கின்றன. இயற்கை நமக்கு கொடுத்துள்ள மிகப்பெரிய கொடை இது. எனினும், இங்குள்ள மனிதர்களின் எண்ணிக்கையையும், மரங்களின் எண்ணிக்கையையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது நமக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. 

சர்வதேச அளவில் ஒரு மனிதனக்கு 422 மரங்கள் என்ற சராசரி உள்ளது. ஆனால், இந்தியாவில் ஒரு மனிதனுக்கு 28 மரங்கள்தான் இருக்கின்றன. மிகவும் வேதனை தரக் கூடிய உண்மை என்னவென்றால் நாட்டின் பொருளாதார தலைநகராக இருக்கும் மும்பையில் ஒரு மனிதனுக்கு 4 மரங்கள் மட்டுமே உள்ளன. 

முற்றிலும் பசுமையான மற்றும் தூய்மையான நாடுகளின் பட்டியலில் கனடா முதலிடத்தில் உள்ளது. இங்கு ஒரு மனிதனுக்கு 8,953 மரங்கள் என்ற விகிதத்தில் மரங்கள் அடர்ந்து காணப்படுகின்றன. கனடாவுக்கு அடுத்ததாக ரஷ்யா, ஒரு மனிதனுக்கு 4,461 மரங்கள் என்ற விகிதத்தில் இரண்டாவது இடத்திலும், ஒரு மனிதனுக்கு 3,266 மரங்கள் என்ற விகிதத்தில் ஆஸ்திரேலியா மூன்றாவது இடத்திலும் உள்ளன. 

பசுமை பரப்பு ஒவ்வொரு நாட்டிலும் வேறுபடுவதற்கு, அரசின் கொள்கை முடிவுகள் ஏற்படுத்தும் பாதிப்பு, மரங்களின் முக்கியத்துவத்தை உணராமல் மக்கள் அவற்றை வெட்டுவது, மரம் வளர்ப்பதில் முனைப்பு காட்டாமல் இருப்பது என பல்வேறு காரணிகள் இருக்கின்றன. இதுபோன்ற காரணிகள்தான் கவலையை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. வனங்கள் அழிக்கப்படுவதற்கு நாம் முடிவு கட்டியே ஆக வேண்டும். 

காடுகள் அழிக்கப்படுவதும், புதிதாக மரங்கள் வளர்க்கப்படாததும் இந்தியாவிற்கு மட்டுமே உள்ள கவலை அல்ல. உலகின் பல நாடுகளுக்கும் இத்தகைய கவலை இருக்கிறது. ஆனால், ஒப்பீட்டளவில் இங்கேதான் அதிக அளவில் காடுகள் அழிக்கப்படுகின்றன. அதுதான் நமக்கு கவலையை அதிகரிக்கச் செய்கிறது. 

அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வு, பூமியில் சுமார் 1000 கோடி ஹெக்டேர் நிலப்பரப்புக்கு மரங்கள் வளர்க்கப்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கிறது. 

இருந்தும், 1990க்குப் பிறகு 12.90 கோடி ஹெக்டேர் பரப்பளவிலான காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. இதுதான் அதிர்ச்சியை அளித்துக்கொண்டிருக்கிறது. 

மரங்களை வெட்டி கடத்துவது, காடுகளில் ஏற்படும் தீ, காடுகளை அழித்து தொழிற்சாலைகளை அமைப்பது, விவசாயத்திற்காக காடுகளை அழிப்பது, மனிதர்கள் செய்யும் தவறுகள் என காடுகள் அழிக்கப்படுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. சுமார் 90 கோடி மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக காடுகளை நம்பியிருக்கிறார்கள்.

இந்தியாவில் அதிக விகிதத்தில் காடுகள் அழிக்கப்படுகின்றன. 1988 ஆம் ஆண்டின் தேசிய வனக் கொள்கையின்படி, இந்தியாவில் மூன்றில் ஒரு பங்கு நிலம் காடாக இருக்க வேண்டும். ஆனால், தற்போதோ 4-ல் ஒரு பங்கு நிலம்தான்( 24.39 சதவீதம் ) காடாக இருக்கிறது. 

2017 ஆம் ஆண்டில் இந்திய வன ஆய்வு அமைப்பு சமர்ப்பித்த ஒரு கணக்கெடுப்பு அறிக்கையில், காடழிப்பு ஆண்டுதோறும் வேகமாக அதிகரித்து வருகிறது. நம் ஒவ்வொருவரின் கண்களுக்கு முன்பாகவும் காடுகள் வேகமாக அழிக்கப்பட்டு வருகின்றன. நாட்டின் மற்ற பகுதிகளோடு ஒப்பிடுகையில் ஆந்திராவிலும் தெலங்கானாவிலும் இது அதிகமாகவே இருக்கிறது.

தெலங்கானா தலைநகரான ஹைதராபாத், பசுமை தோட்டங்களும், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளும் நிறைந்த சுற்றுச்சூழலுக்கு பெயர் பெற்றது. துரதிர்ஷ்டவசமாக, இந்த நகரம்கூட இன்று காடழிப்பின் பிடியில் உள்ளது. பசுமைப் பரப்பில் கிட்டத்தட்ட 60 சதவீதத்தை அது இழந்துவிட்டது. 

காடுகள் அழிக்கப்படுவதால் ஆஸ்துமா போன்ற சுவாசப் பிரச்சினைகள் அதிகரிக்கின்றன. அதுமட்டுமல்ல, பருவநிலை மாற்றத்தையும் அது ஏற்படுத்துகிறது. இதனால், பருவத்தில் மழை பெய்வது பாதிக்கப்படுகிறது. விவசாயம் பாதிக்கப்படுகிறது. இயற்கைச் சூழல் பாதிக்கப்பட்டு, உணவுக்காகவும், தண்ணீருக்காகவும் காடுகளைவிட்டு மிருகங்கள் ஊருக்குள் வருவது அதிகரிக்கிறது. 

பருவத்தே மழை பெய்ய வேண்டியது அவசியம். அதற்கு காடுகள் அவசியம். அதோடு, ஆக்ஸிஜன் மிக மிக அவசியம். 

முழுமையாக வளர்ந்த ஒரு மரம் ஆண்டுக்கு ரூ. 24 லட்சம் மதிப்புள்ள ஆக்ஸிஜனை நமக்கு வழங்குகிறது. அதோடு, சுமார் 0.53 டன் கார்பன்-டை-ஆக்சைடு மற்றும் சுமார் 1.95 கிலோ பிற மாசுகளை அது உள்ளிழுத்துக்கொள்கிறது. ஆரோக்கியமான ஒரு நபர் ஒரு நாளைக்கு சுமார் 3 சிலிண்டர் ஆக்ஸிஜனை சுவாசிக்கிறார். அவர் வாழ்நாள் முழுவதும் ஆக்ஸிஜனை உள்ளிழுக்க குறைந்தபட்சம் 3 மரங்கள் தேவை. நட்பாகவும், அன்பாகவும் பழகத் தெரிந்தவன் மனிதன். ஆனால், மனிதர்களுக்கு ஆதாரமாக இருக்கும் மரங்களிடம் நாம் அன்பாகவும், அக்கறையாகவும் இருக்கிறோமா?

மரங்களை பாதுகாப்பது, வளர்ப்பது ஆகியவற்றில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒற்றை நோக்கோடு ‘Green India Challenge’ அமைப்பு செயல்பட்டு வருகிறது. ஒவ்வொருவரும் தங்கள் வாழ்நாளில் 3 மரங்களையாவது வளர்ப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனும் இலக்கோடு ‘Green India Challenge’ அமைப்பு பாடுபட்டு வருகிறது. இதன் மூலம் மனிதர்கள் இயற்கையின் பலனை அனுபவிப்பர்களாக மட்டுமல்லாமல், இயற்கைக்குத் திருப்பிக் கொடுக்கக் கூடியவர்களாகவும் உருவாவார்கள். மாணவர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், தொழில்வல்லுநர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ் அதிகாரிகள், அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள், பத்திரிகையாளர்கள், திரை பிரபலங்கள், பொது மக்கள் என பலரது ஒத்துழைப்புடன் இதுவரை சுமார் 3.5 கோடி மரங்கள் நடப்பட்டுள்ளன. 

‘Green India Challenge’ – ன் இந்த முயற்சியில் பல்வேறு தொழில் அமைப்புகளும், நிறுவனங்களும் கரம் கோர்த்திருக்கிறார்கள். இதன்மூலம், அரசாங்கத்தின் உதவி இன்றி, இந்த அமைப்பு 38 நாடுகளில் பசுமையை அதிகரிக்க பாடுபட்டு வருகிறது. நல்ல நோக்கங்களுடன் ஒரு நிறுவனம் எவ்வாறு சிறப்பாக இயங்க முடியும் என்பதற்கு இந்நிறுவனம் ஒரு உதாரணமாகவும் விளங்கி வருகிறது.  

அரசு, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள் என அனைவரையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவருவதற்கான முயற்சியில் ‘Green India Challenge’ ஈடுபட்டு வருகிறது. இதன்மூலம் கூட்டுப் பொறுப்புணர்வை உணர்ந்து அனைவரும் இணைந்து செயல்படவும், தூய்மையான காற்றை சுவாசிப்பதற்கான இலக்கை எட்டவும் முடியும். அதோடு, மனித சமூகத்தின் வாழ்க்கையை எளிதாக்கவும் முடியும். 

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அக்கறை கொண்டுள்ள தெலங்கானா அரசு இதற்காக ‘ஹரிதா ஹராம்’ என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இதேபோல், ஆந்திர அரசும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளது. இந்த முயற்சிகள் அனைத்தையும் வெற்றிபெற வைக்க வேண்டிய கடமை நம் அனைவருக்கும் இருக்கிறது. இதற்காக, இளைஞர்களும் மாணவர்களும் பாடுபட வேண்டும். இந்த திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்த வேண்டும். எவ்வளவு மரங்கள் நடுகிறோம் என்பதைவிட எவ்வளவு மரங்களை நன்றாக பராமரிக்கிறோம் என்பதே முக்கியம். இவ்விஷயத்தில் உள்ளூர் அமைப்புகள், கல்லூரிகள், பள்ளிகள் உதவ முடியும். 

மாநகரங்களில் புதிய பூங்காக்களை ஏற்படுத்துவதற்கும், அவற்றை நன்கு பராமரிப்பதற்கும் நிதி ஒதுக்குவது மிகவும் முக்கியம். மரங்கள் குறைவாக காணப்படும் பகுதிகளுக்கு கூடுதல் கவனம் கொடுக்க வேண்டும். சுற்றுச்சூழல் மாசுவை குறைப்பதற்கு இவை பெருமளவில் உதவும்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் தன்னலமின்றி பணிபுரியும் நபர்களையும், அமைப்புகளையும் அரசு அடையாளம் கண்டு அங்கீகரிக்க முன்வர வேண்டும். சுற்றுச்சூழலுக்காக பாடுபட்டு வரும் பல்வேறு அமைப்புகளும் கூடுதல் உறுதியுடன் களப்பணி ஆற்ற இது உதவும். ஏனெனில் மரங்களை வளர்ப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம். 

அஸ்ஸாமின் ஜோர்ஹட் எனும் சிறு நகரைச் சேர்ந்த சுற்றுச்சூழல் போராளியான ஜாதவ் மோலி பயெங், தற்போது இந்திய காடுகளின் தந்தையாக வர்ணிக்கப்படுகிறார். தனது நகருக்கு அருகில் சுமார் 1300 ஏக்கர் தரிசு நிலத்தில், தனி ஒரு நபராக மரங்களை நட்டு பராமரித்து இடைவிடாமல் உழைத்த உழைப்புக்காக அவர் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறார். தனது வாழ்க்கையில் 30 வருடங்களை அவர் இதற்காக தியாகம் செய்திருப்பது மற்றவர்களுக்கு உத்வேகம் அளிப்பதாக உள்ளது. அவரது இந்த செயல், ஜோர்ஹட் நகர மக்கள் பஞ்சம், பட்டினி மற்றும் பல்வேறு நோய்களில் இருந்து விடுபட உதவியுள்ளது. அதோடு, சுத்தமான காற்றையும் பசுமையான சுற்றுச்சூழலையும் அவர்கள் அனுபவித்து வர காரணமாக அமைந்துள்ளது. 

இதேபோல், தெலுங்கு சுற்றுச்சூழல் போராளி வனஜீவி ராமைய்யாவின் வாழ்க்கை, ஆந்திரா மற்றும் தெலங்கானா ஆகிய இரு மாநில மக்களுக்கும் உத்வேகத்தை அளித்து வருகிறது. 

தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தைச் சுற்றிலும் கனிகளையும் நிழலையும் தரும் சுமார் 1000 மரக்கன்றுகளை நட்டு வளர்த்தவர் ராமையா. தற்போது அவருக்கு வயது 80. இருந்தபோதும், மரங்களை நட்டு வளர்ப்பதில் இன்னமும் ஆர்வம் குறையாமல் பணிபுரிந்து வருகிறார். இதன் காரணமாக 6ம் வகுப்பு சமூக அறிவியல் பாடபுத்தகத்தில் அவரது வாழ்க்கை வரலாறு ஒரு பாடமாக அமைக்கப்பட்டுள்ளது. 

நமக்காகவும், நமது எதிர்கால சந்ததியினருக்காகவும் பசுமை இந்தியாவை நாம் மீண்டும் உருவாக்க உறுதியேற்போம். இதற்காக அதிக அளவில் மரங்களை நடுவதற்கான சவாலை ஏற்போம். இன்றுவரை நமது நல்வாழ்விற்கு முக்கிய ஆதாரமாக விளங்கி வரும் இயற்கை அன்னைக்கு திருப்பித் தருவதற்கான சிறந்த வழி இதைவிட வேறு என்ன இருக்க முடியும்?

- எம் கருணாகர் ரெட்டி

( நிறுவனர் - ‘Green India Challenge’ )

மொழிபெயர்ப்பு: பால. மோகன்தாஸ்

மொத்த வார்த்தைகள் : 1000

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.