கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள பறிப்பல்லியில் நான்கு வயது குழந்தை உடலில் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்க நேற்று கொண்டுவரப்பட்டது. இதனால் சந்தேகமடைந்த மருத்துவர்கள் காவல் துறையினரிடம் தகவலளித்தனர்.
இதையடுத்து, காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் சாப்பிட மறுத்ததற்காக அடித்ததில் குழந்தை இறந்துவிட்டதாக குழந்தையின் தாய் ரம்யா வாக்குமூலம் அளித்திருந்தார்.
இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திவந்த நிலையில், மருத்துவமனை நிர்வாகம் குழந்தையின் உடற்கூறாய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் குழந்தை, அதன் தாய் அடித்ததால் இறக்கவில்லையென்றும், ஏற்கனவே அது நிமோனியா மற்றும் மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் அதன் காரணமாகவே குழந்தை தியா இறந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த அறிக்கையின் மூலம் குழந்தை தியா இறப்பிற்கும் ரம்யாவிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என உறுதிசெய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:குளத்தில் குளிக்கச் சென்ற எட்டாம் வகுப்பு மாணவி நீரில் மூழ்கி உயிரிழப்பு!