கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் அதிகளவில் மக்கள் தங்களின் சொந்த மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்தனர். இந்த சூழலைப் பயன்படுத்தி பயங்கரவாதிகள் பல்வேறு மாநிலங்களுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்த திட்டமிட்டு வருகின்றனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால் உளவுத் துறை அலுவலர்களுடன் கர்நாடக காவல் துறை தலைவர் பிரவீன் சூட் வீடியோ காணொலி மூலம் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் அனைத்து மாவட்டங்களிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனிடையே ஐநாவிடம் இருந்து வந்த அறிக்கையின் தீவிரவாதத் தடுப்புப் புரிவு மற்றும் தேசிய புலனாய்வு அமைப்பு ஆகியவை இணைந்து பயங்கரவாதத்தைத் தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அந்த அறிக்கையின்படி, கேரளா மற்றும் கர்நாடகாவில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்தவர்களைக் கைது செய்ய தீவிரம் காட்டப்பட்டு வருகிறது.
இவர்களுடன் இணைந்து தமிழ்நாடு காவல் துறையும் ரசிகயமாக விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: கேரளா தங்க கடத்தல்: ஸ்வப்னா, சந்தீப் நாயருக்கு 5 நாள் சுங்கக் காவல்!