புதுடெல்லியிலிருந்து காஷ்மீரின் கட்ரா வரை செல்லும் 'வந்தே பாரத்' எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், மத்திய அமைச்சர்கள் ஜிதேந்திரா சிங், ஹர்ஷ்வர்தன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
பின்னர் இந்த நிகழ்வில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பிரதமர் அலுவலகத்துறை அமைச்சர் ஜிதேந்திரா சிங், மத்தியில் உள்ள நரேந்திர மோடி தலைமையிலான அரசு, இந்தியாவிலிருந்து பயங்காரவாதத்தை ஒழிக்கும் என்றும் ஜம்மு-காஷ்மீரில் இருந்து அரசியலமைப்பின் 370 வது பிரிவை நீக்கியது அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட 'தைரியமான முடிவு' என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், பயங்கரவாதம் அழிக்கப்பட்டு நாட்டில் நிரந்தர அமைதி நிலவும் காலம் விரைவில் வரும் என்று தான் நம்புவதாகவும் 370 வது பிரிவை ரத்து செய்தது புதிய இந்தியாவைப் பற்றிய மோடியின் கனவு என்றும் இந்தப் புதிய ரயில் போக்குவரத்தானது இந்த கனவை நிறைவேற்றுவதோடு தகவல்தொடர்பையும் மதச் சுற்றுலாவையும் மேம்படுத்தும் என்று கூறினார்.
இதையும் படியுங்க:
டெல்லி - கத்ரா இடையே 'வந்தே பாரத்' ரயில் சேவை - தொடங்கி வைத்த அமித் ஷா!