ETV Bharat / bharat

சிறை கூடாரமாக மாறிய வகுப்பறைகள்! - கதிர்காமம் அரசு பள்ளி, கல்லூரி அறைகள்

புதுச்சேரி: முக்கிய குற்ற வழக்குகளில் சிக்கும் குற்றவாளிகளை தனிமைப்படுத்தி சிறை வைப்பதற்காக கதிர்காமம் அரசுப்பள்ளி, கல்லூரி அறைகள் தற்காலிகமாக சிறை கூடாரமாக மாற்றப்பட்டு இன்று முதல் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

சிறை கூடாரமாக மாறிய வகுப்பறைகள்!
சிறை கூடாரமாக மாறிய வகுப்பறைகள்!
author img

By

Published : Apr 27, 2020, 10:14 PM IST

புதுச்சேரி காலாப்பட்டில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இங்கு தண்டனை, விசாரணை கைதிகள் என 220க்கும் மேற்பட்டோர் உள்ளனர். தற்போது ஊரடங்கு காரணமாக முக்கிய குற்ற வழக்குகளில் பிடிபட்டவர்கள் மட்டும் அங்கு அடைக்கப்பட்டுள்ளனர். அங்குள்ள கைதிகளுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக அவ்வப்போது அங்குள்ள மருத்துவக் குழுவினரால் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் புதிய குற்றவாளிகளை சிறையில் அடைக்கும்போது நோய் தொற்று அபாயம் இருந்ததால் மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்வது தொடர்பாக சிறைத்துறை நிர்வாகம் அரசுடன் ஆலோசித்தது. இதனடிப்படையில், மாநில அரசின் ஒப்புதலுடன் புதுச்சேரி, கதிர்காமம் இந்திராகாந்தி அரசு கலை மற்றும் அறிவியல்கல்லூரி வளாகத்தில் உள்ள பள்ளிகளின் அறைகள் தற்காலிக சிறைக் கூடாரமாக மாற்றப்பட்டுள்ளன.

சிறை கூடாரமாக மாறிய வகுப்பறைகள்!

இதற்காக கல்லூரியில் இருந்த 6 அறைகளும், கைதிகளின் அறைகளாக மாற்றம் செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த தற்காலிக சிறைச்சாலை இன்று முதல் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. . மேலும் கல்லூரி, பள்ளி உள்ள வெளிப்புற நுழைவு வாயில்கள் இரண்டும் மூடப்பட்டு அங்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மாநில அரசின் இந்த நடவடிக்கை பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பார்க்க: பெண்கள் செய்யும் தவறுகள் தான் கோவிட்-19 தொற்றுக்கு காரணம் - மதகுரு பேச்சால் சர்ச்சை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.