ஹைதராபாத்: நடிகை விஜயசாந்தி இன்று (டிசம்பர் 7) பாஜகவில் இணைந்துள்ளார்.
டிசம்பர் 6ஆம் தேதி உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த விஜயசாந்தி, தற்போது பாஜகவில் இணைந்துள்ளார். பாஜக தேசிய செயலாளர் அருண் சிங் முன்னிலையில் அவர் இன்று பாஜகவில் இணைந்தார்.
பாஜகவின் மூலமாக தனது அரசியல் பயணத்தை தொடங்கிய விஜயசாந்தி, பின்னர் டிஆர்எஸ்-இல் இணைந்தார். தெலங்கானா உருவாக்கத்துக்கு முன் 2014ஆம் ஆண்டு விஜயசாந்தி காங்கிரஸில் இணைந்தார். தற்போது மீண்டும் தனது ஆரம்பப் புள்ளியில் வந்து நிற்கிறார்.