ETV Bharat / bharat

திருப்பதியில் சாமி தரிசனம் செய்த தெலங்கானா முதலமைச்சர்! - chandrasekara rao

அமராவதி: தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.

சந்திரசேகர ராவ்
author img

By

Published : May 27, 2019, 12:11 PM IST

Updated : May 27, 2019, 12:30 PM IST

சந்திரசேகர் ராவ் தனது குடும்பத்தினருடன் திருமலையில் உள்ள தேவஸ்தான விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தார். குடும்பத்துடன் திருப்பதிக்கு வந்த சந்திரசேகர் ராவிற்கு திருப்பதி நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து தும்மகுண்டலாவில் உள்ள வெங்கேடஸ்வர கோயிலில் தரிசனம் செய்தார். அப்போது, அர்ச்சகர்கள் சிறப்பு ஆராதனை செய்தனர். இதனையடுத்து சந்திரசேகர் ராவ் தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.

திருப்பதி கோயிலில் சந்திரசேகர ராவ்
திருப்பதி கோயிலில் சந்திரசேகர ராவ்

மேலும், 2018ஆம் ஆண்டு சந்திரசேகர் ராவ் தனது குடும்பத்துடன் வந்து வேண்டுதலை நிறைவேற்றிச் சென்றது குறிப்பிடத்தக்கது.

சந்திரசேகர் ராவ் தனது குடும்பத்தினருடன் திருமலையில் உள்ள தேவஸ்தான விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தார். குடும்பத்துடன் திருப்பதிக்கு வந்த சந்திரசேகர் ராவிற்கு திருப்பதி நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து தும்மகுண்டலாவில் உள்ள வெங்கேடஸ்வர கோயிலில் தரிசனம் செய்தார். அப்போது, அர்ச்சகர்கள் சிறப்பு ஆராதனை செய்தனர். இதனையடுத்து சந்திரசேகர் ராவ் தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.

திருப்பதி கோயிலில் சந்திரசேகர ராவ்
திருப்பதி கோயிலில் சந்திரசேகர ராவ்

மேலும், 2018ஆம் ஆண்டு சந்திரசேகர் ராவ் தனது குடும்பத்துடன் வந்து வேண்டுதலை நிறைவேற்றிச் சென்றது குறிப்பிடத்தக்கது.

பொள்ளாச்சி அருகே நவமலை மலைவாழ் பகுதிக்குள் ஒற்றை யானை புகுந்து அட்டகாசம் - இரண்டு நாட்களில் ஒற்றை யானை தாக்கியதில் சிறுமி உட்பட 2 பேர் உயிரிழப்பு திமுகவின் சார்பாக பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் குடும்பத்தினருக்கு ஆறுதல் நிதி வழங்கி மாற்று இடம் வழங்க அதிகாரிகளுடன் ஆலோசனை

பொள்ளாச்சி -மே -27
பொள்ளாச்சியை அடுத்த நவமலை வனப்பகுதிக்குள் 50க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர், இந்நிலையில் கடந்த சில நாட்களாக நவமலைப் பகுதியில் ஒற்றை யானை ஒன்று புகுந்து மக்களை அச்சுறுத்தி வந்தது, இந்நிலையில் 24 தேதி இரவு வேட்டை தடுப்பு காவலர் ராஜு என்பவரின் மகள் ரஞ்சனாவை தாயுடன் நடந்து செல்லும்போது ஒற்றை யானை தாக்கியதில் சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், இதைத்தொடர்ந்து அந்த ஒற்றை யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் ஈடுபட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு குடியிருப்புப் பகுதிக்கு மீண்டும் அந்த ஒற்றை யானை புகுந்து  அப்பகுதியில் திண்ணையில் அமர்ந்து கொண்டிருந்த மாகாளி என்ற முதியவரை தாக்கியது, சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார், இதனை அடுத்து அப்பகுதியில் இருந்த மலைவாழ் மக்கள் யானையை விரட்டினர்,சம்பவம் அறிந்து வந்த வனத்துறையினர் மாகாளியின் உடலை மீட்டு யானையை விரட்டும் பணியில் டாப்சிலிப்பில்  கும்கி யானைகளை கொண்டு வந்து ஒற்றை யானையை காட்டுக்குள் அனுப்ப தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு   வருகின்றனர்,கடந்த 3 நாட்களில் ஒற்றை யானை தாக்கியதில் சிறுமி உட்பட 2 பேர் உயிரிழந்த சம்பவத்தால் அங்கு உள்ள மலைவாழ் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது இதனை அறிந்த பொள்ளாச்சி பாராளுமன்றம் உறுப்பினர் சண்முகசுந்தரம் கோவை புறநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமன் ஆகியோர் அப்பகுதிக்கு நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி தி மு க வின் சார்பாக நீதி அளித்தனர்  அப்பகுதி மக்கள் பாராளுமன்ற உறுப்பினரிடம் தங்களுக்கு மாற்று இடம் வழங்குமாறு கோரிக்கை வைத்தனர். இதனை அடுத்து மின்சார அலுவலக ஊழியர்கள் குடியிருப்பு பகுதியில் பயன்படுத்தப்படாமல் காலியாக உள்ள  வீடுகளை ஆய்வு செய்த பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு  தற்காலிக  குடியிருப்புகள் அமைத்து தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.
Last Updated : May 27, 2019, 12:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.