'பாப்பிலன்' என்பது கைரேகை தொழில் நுட்ப கருவியாகும். அந்தக் கருவியில் ஒருவரின் கைரேகை மற்றும் அவரது விவரங்களைப் பதிவிட்டுவிட்டால் அவர் தொடும் இடங்கள், பொருள்களை வைத்தே அவரை அடையாளம் காணலாம். அதுமட்டுமல்லாமல், சிதைந்த அடையாளம் தெரியாத உடல்களின் விவரங்களும் இக்கருவி மூலம் எளிதில் கண்டுபிடிக்கலாம்.
இந்தியாவில் இந்த தொழில் நுட்பத்தை தெலங்கானா கைரேகை பணியகம் முதன்முதலில் கடந்தாண்டு பயன்பாட்டுக்குக் கொண்டுவந்தது. அந்த தொழில் நுட்பத்தை வைத்து பாஸ்போர்ட் பெறுபவர்களின் விவரங்களையும், குற்றவாளிகளின் விவரங்களையும் தெலங்கானா அரசு பதிவு செய்துவந்தது. அதில் காவல் துறையில் மட்டும் 9 லட்சம் பழைய குற்றவாளிகளின் கைரேகைகள் உள்ளன.
இந்த நிலையில் அத்தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, தெலங்கானா காவல் துறை கடந்தாண்டு மட்டும் உயிரிழந்த 41 பேரின் உடல்களை அடையாளம் கண்டுள்ளது. இந்தாண்டு இதுவரை 17 உடல்கள் அடையாளம் காணப்பட்டன. அதேபோல 111 குற்றவாளிகள் எளிதில் கண்டுபிடிக்கப்பட்டனர்.
இதுகுறித்து தெலங்கானா காவல்துறையினர் குற்றவாளிகளை எளிதிலும், விரைவாகவும், குறிப்பாகவும் கண்டுபிடிக்க 'பாப்பிலன்' உதவியாக உள்ளது எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: தெலங்கானாவில் 6 நக்சலைட்டுகள் கைது: 2 துப்பாக்கி, தோட்டாக்கள் பறிமுதல்!