இது தொடர்பாக அம்மாநில சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீநிவாஸ் ராவ் வெளியிட்ட அறிக்கையில், "தெலங்கானாவில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களின் சடலங்களிலிருந்து மாதிரிகளை பரிசோதிப்பதற்காக சேகரிக்க வேண்டாம். இறந்தவர்களை கரோனா தொற்று உறுதியானவர்களாகவே கருத வேண்டும்.
இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள், தொடர்பில் இருந்தவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்த வேண்டும். இவர்களில் யாருக்காவது தொற்று உறுதி செய்யப்பட்டால் முன்னதாக இறந்தவர்களை கரோனா உறுதி செய்யப்பட்டவராக பதிந்து கொள்ளமாறு அறிவுறுத்தப்படுகிறது.
மேலும், கரோனா தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படுபவர்களை பரிசோதிப்பதற்காகவும் அவர்களிடம் மாதிரிகளை சேகரிப்பதற்காகவும் தனி வாகனங்களை இயக்கவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில், ஒருவேளை அவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் பின்னர் மருத்துவமனைகளுக்கு மாற்றப்படுவார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது வரை தெலங்கானாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 872ஆகவும் இறந்தவர்களின் எண்ணிக்கை 23ஆகவும் உள்ளது.
இதையும் படிங்க: சராசரி இணைய பயன்பாட்டு அளவை உயர்த்திப் பிடித்த ஊரடங்கு!