தெலங்கானா, கேரளா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டார். அதன்படி, தெலங்கானாவின் புதிய ஆளுநராக தமிழ்நாடு பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். இதனால், ஆளுநராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தமிழ்நாட்டு பெண்மணி என்ற பெருமையையும், தெலங்கானாவின் முதல் பெண் ஆளுநர் என்ற பெருமையையும் தமிழிசை பெற்றுள்ளார்.
இதையடுத்து, கட்சி பாகுபாடின்றி அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும், பொதுமக்களும் தமிழிசையை வாழ்த்து மழையில் நனைய வைத்தனர். இந்நிலையில், தெலங்கானாவின் புதிய ஆளுநராக செப்டம்பர் 8ஆம் தேதி அவர் பதவியேற்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆளுநராக பதவியேற்கவுள்ள தமிழிசை தமிழ்நாடு பாஜக தலைவர் பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.