ஹைதராபாத் (தெலங்கானா): ஏழைகள் பயன்பெறும் வகையில் சிறிய நோய் கண்டறியும் சோதனை மையங்களை அரசு திறந்துள்ளது.
இங்கு, அல்ட்ராசோனோகிராபி (யு.எஸ்.ஜி) போன்ற முக்கிய நோயறிதல் சேவைகள், எக்ஸ்-ரே போன்ற கதிரியக்க சேவைகள், ஈ.சி.ஜி (எலெக்ட்ரோ கார்டியோகிராபி) போன்ற அடிப்படை இருதய பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்படும்.
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மஹ்மூத் அலி, "தெலங்கானா முதலமைச்சர் கே. சந்திரசேகர ராவின் திட்டமான ‘பாஸ்தி தவகானா’ மூலம் ஏழை மக்கள் தரம்வாய்ந்த சிகிச்சையை இலவசமாக பெற்றுவருகின்றனர். எனினும், நோய்களை கண்டறியும் சோதனைகளை மேற்கொள்ள மருத்துவர்கள் மக்களை பரிந்துரைக்கின்றனர்.
இதனால் ஏழை மக்கள் தாங்கள் சம்பாதித்த பெரும் பணத்தை செலவிட வேண்டியுள்ளது. அதனால் இந்த புதிய மினி நோய்க் கண்டறியும் சோதனை மையங்கள் தொடங்கப்பட்டுள்ளது” என்றார்.
இன்று முதற்கட்டமாக 8 மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. வரும் நாட்களில் இதனை பெருக்கும் முயற்சிகளை அரசு மேற்கொள்ளும் என்று கூறப்பட்டுள்ளது.