அந்தக் கவிதையில்,
தூரத்தில் நானிருந்தாலும் சென்னையை துரத்தும் கரோனா என்னைக் கவலையடையச் செய்கிறது...
கட்டாயம் வீட்டில் இருங்கள் என்றால் கட்டுக்கடங்காமல் தெருவில் இறங்குகிறீர்கள்...
அங்கேயே வீட்டில் இருங்கள் என்றால் அங்காடிக்குச் செல்கிறோம் என்கிறீர்கள்...
கடைப்பிடியுங்கள் கட்டுப்பாடுகளை என்றால் கடைக்குப் போகிறேன் என்று கிளம்புகிறீர்கள்...
ஊரடங்கைக் கடைப்பிடியுங்கள் என்றால் ஊருக்குப் போகிறேன் அவசியம் என்கிறீர்கள்...
முகக்கவசம் அணியுங்கள் என்றால் மூச்சு முட்டுகிறது முடியாதென்கிறீர்கள்...
சமூக இடைவெளி வேண்டும் என்றால் சங்கடம் இடையில் இது எதற்கு என்கிறீர்கள்...
கை கழுவுங்கள் அடிக்கடி என்றால் கை கழுவுகிறீர்கள்! அவ்வேண்டுகோளை?
கரோனா கேட்கிறது... அடங்காமல் நீங்கள் இருந்துவிட்டு அடங்கவில்லை நான் எனக்கூறுவது சரியா?
எனவே... அடிபணிவோம் அவசிய கட்டளைகளுக்கு... அடித்து விரட்டுவோம் கரோனாவை! - என முடிவெடுங்கள். ..முடித்து வையுங்கள் கரோனாவின் விபரீத விளையாட்டை... எனக் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய, மாநில அரசுகள் அறிவிக்கும் கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்காமல், நோய்த் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துவருவதாக குறை கூறுவது எவ்வகையில் நியாயம் என கேள்வி எழுப்பிய அவர் நாம் செய்த தவறுக்கு கரோனா மேல் பழி போடுவது எவ்வாறு தகும் எனவும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: கரோனாவுக்காக குரல் கொடுத்த எஸ். பி. பி, கவிதை தொடுத்த வைரமுத்து