ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்திலுள்ள காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் உள்ள தெலுங்கானா இளநிலை மருத்துவர்கள் சங்கம் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. மேலும் புதன்கிழமை முதல் தங்கள் கடமைகளை புறக்கணிக்க ஒருமனதாக முடிவு செய்துள்ளது.
அரசு நடத்தும் போதனா வைத்தியசாலையில் கரோனா அல்லாத சேவைகளை மீண்டும் தொடங்குவதற்காக இந்தச் சங்கத்தினர் பலமுறை உரிய அலுவலர்களிடம் மனு அளித்துள்ளனர். அவர்களது வேண்டுகோள் கிடப்பில் போடப்பட்டதால் இந்த வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர்.
கரோனா அல்லாத மருத்துவ சேவைகளில் காந்தி மருத்துவமனை நிர்வாகிகளுக்கு எந்த அக்கறையும் இல்லை. எனவே, நாங்கள் எங்கள் கடமைகளை ஒருமனதாக புறக்கணிக்கவுள்ளோம் என அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் கரோனா அல்லாத பிற மருத்துவ சேவைகளை மீண்டும் தொடங்குவது பிற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும். மேலும் தொற்றுநோயால் கடந்த ஏழு மாதங்களாக பாதிக்கப்பட்டுள்ள முதுகலை மாணவர்களின் கல்வியாளர்களுக்கும் நீதி வழங்க முடியும் என்றனர்.