ETV Bharat / bharat

வசந்தகுமார் மறைவு: தமிழிசையை நேரில் சந்தித்து தெலங்கானா முதலமைச்சர் ஆறுதல்! - Telangana CM

ஹைதராபாத்: மக்களவை உறுப்பினர் வசந்தகுமார் மறைவுக்கு, தெலங்கானா ஆளுநர் தமிழிசையை நேரில் சந்தித்த அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் ஆறுதல் கூறினார்.

தமிழிசை
தமிழிசை
author img

By

Published : Aug 30, 2020, 12:02 AM IST

கன்னியாகுமரி மக்களவை உறுப்பினரும் தொழிலதிபருமான வசந்தகுமார் கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவம் பெற்றுவந்த நிலையில், ஆகஸ்ட் 28ஆம் தேதி மாலை உயிரிழந்தார்.

அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். அவரது உடல் நல்லடக்கம் ஆகஸ்ட் 30ஆம் தேதி நடைபெறவுள்ளது.

மறைந்த வசந்தகுமார் எம்.பி. தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனின் சித்தப்பாவும்கூட. இந்நிலையில், வசந்தகுமார் மறைந்த செய்தி அறிந்து தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், தமிழிசை சௌந்தரராஜனை ஆளுநர் மாளிகையில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.