ETV Bharat / bharat

கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி: அலுவலர்கள் ஆயத்தமாக இருக்க தெலங்கானா முதலமைச்சர் அறிவுறுத்தல்

author img

By

Published : Jan 12, 2021, 8:56 AM IST

தெலங்கானாவில் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியைத் தொடங்குவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய அலுவலர்களுக்கு, அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் வலியுறுத்தியுள்ளார்.

Telangana CM
Telangana CM

ஹைதராபாத்: ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்ட், பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் ஆகிய இரு கரோனா தடுப்பூசிகளை அவசர காலத்திற்குப் பயன்படுத்த இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு முன்னதாக அனுமதி வழங்கியது. இதையடுத்து வரும் 16ஆம் தேதி முதல் நாடு முழுவதும் முதல்கட்டமாக முன்களப் பணியாளர்கள் உள்ளிட்ட 30 கோடி பேருக்கு, கரோனா தடுப்பூசி செலுத்தும் பணித் தொடங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

தற்போது அனைத்து மாநில அரசுகளும், தடுப்பூசி போடுவதற்கான ஆயுத்தப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், தெலங்கானா மாநிலத்தில் தடுப்பூசி செலுத்தும் பணியைத் தொடங்குவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடிக்க சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் வலியுறுத்தியுள்ளார்.

தடுப்பூசி செலுத்துவதற்கானத் தயார் பணிகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்திய அவர், "கோவாக்சின், கோவிஷீல்ட் ஆகிய இரு தடுப்பூசிகள் கரோனாவுக்கு எதிராக நன்கு செயல்புரிவதை மத்திய அரசு கண்டறிந்துள்ளது. எனவே, தெலங்கானாவில் இந்த தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்த முடிவு செய்துள்ளோம்.

காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்டப் பாதுகாப்பு வீரர்கள் முதலில் தடுப்பூசி போட்டுக்கொள்வதை உறுதிப்படுத்த வேண்டும். தடுப்பூசி போடுவதற்கு, அனைத்து முதன்மைச் சுகாதார நிலையங்களும் தயார் நிலையில் உள்ளன. தடுப்பு மருந்தை சேமித்து வைப்பதற்காக, மாநிலம் முழுவதும் 866 குளிரூட்டப்பட்ட கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்பு மயக்கம் உள்ளிட்ட பக்க விளைவுகள் ஏற்படும் நபர்களை தங்கவைப்பதற்கான அறைகள் தடுப்பூசி மையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தடுப்பூசிப் போடும் பணிகளை, தலைமைச் செயலாளரின் தலைமையில், தன்னார்வலர்கள் கண்காணிப்பாளர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள், எம்.எல்.சி-க்கள் இணைந்து இப்பணிகள் சரியாக நடைபெறுகின்றனவா என்பதை உறுதி செய்ய வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டிற்கு முதல்கட்டமாக 8 லட்சம் கரோனா தடுப்பூசிகள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.