கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா - சீனா ராணுவத்தினருக்கு இடையே நடந்த மோதலில், இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். இதனால் இரு நாடுகளிக்கிடையே பதற்றம் நிலவி வருகிறது.
உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு அந்தந்த மாநிலங்கள் நிவாரண உதவிகள் அறிவித்தனர். இதில் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சமும், தெலங்கானாவைச் சேர்ந்த சந்தோஷ் பாபுவின் குடும்பத்தினருக்கு ரூ. 5 கோடியுடன், குரூப் -1 தேர்வுக்கான பணி நியமன ஆணையும் வழங்கப்படும் என அறிவித்தார்.
இந்நிலையில் இன்று வீரமரணம் அடைந்த சந்தோஷ் பாபுவின் குடும்பத்தினரை நேரில் சென்று முதலமைச்சர் சந்தித்தார். அப்போது சந்தோஷ் பாபுவின் குடும்பத்தினருக்கு ரூ. 1 கோடி காசோலையையும், அவரது மனைவியின் கைகளில் ரூ. 4 கோடிக்கான காசோலையையும் வழங்கினார். அதனோடு சந்தோஷ் பாபுவின் மனைவி சந்தோஷிக்கு குரூப் - 1 நிலையிலான பணி நியமன ஆணையையும், பஞ்ஜாரா ஹில்ஸ் பகுதியில் 711 ஸ்கொயர் ஃபீட்டில் அமைந்துள்ள வீட்டு பத்திரத்தையும் வழங்கினார்.