மக்களவைத் தேர்தலின் வாக்குகள் எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் வேளையில், தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா தோற்பது உறுதியாகியுள்ளது. கவிதாவுக்கு எதிராக நிசாமாபாத் தொகுதியில் கிட்டத்தட்ட ஆயிரம் விவசாயிகள் வேட்புமனு தாக்கல் செய்தனர். அதில் 178 விவசாயிகளின் வேட்புமனு அங்கீகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மஞ்சள் மற்றும் சோளம் ஆகியவற்றிற்கு குறைந்தபட்ச ஆதரவு விலையைக்கூட ஆளும் ராஷ்டிரிய சமிதி கட்சி நிர்ணயிக்க தவறியதே விவசாயிகள் எதிர்ப்புக்கு காரணம்.
இதனால் கவிதா நின்ற தொகுதியில் 185 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மக்களவைத் தேர்தல் வாக்குகள் எண்ணிக்கையில் பாஜகவை சேர்ந்த தர்மபுரி அரவிந்த், கவிதாவை காட்டிலும் 40,000 வாக்குகள் அதிகமாக இருக்கிறார். கவிதாவுக்கு எதிராக வேட்புமனு தாக்கல் செய்த விவசாயிகள் கொஞ்சம் கொஞ்சம் வாக்குகளை பிரித்திருக்கின்றனர்.
எனினும் அது கவிதா தோல்விக்கு காரணமல்ல. காங்கிரஸ் வேட்பாளர் மது கவுடு யஷ்கி 24,000 வாக்குகள் பெற்றுள்ளார். விவசாயிகள் கவிதாவுக்கு எதிராக வேட்புமனு தாக்கல் செய்யாமல் இருந்திருந்தால், பெரிய வித்தியாசத்தில் தோற்றிருக்கமாட்டார்.