உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் பெருந்தொற்று இந்தியாவில் தீவிரமடைந்து வருகிறது. அதன் பரவலைத் தடுக்க, தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, தெலங்கானா மாநிலத்தில் இரண்டாம் கட்டப் பரவல் நிலையை அடைந்திருக்கும் கோவிட்-19 பெருந்தொற்றுநோயைத் தடுக்க மே 7ஆம் தேதி வரை முழுமையான முடக்கத்தை நீட்டிப்பதாக மாநில அரசு அறிவித்துள்ளது.
மேலும், வைரஸ் தொற்றின் சமூகப் பரவலைத் தடுக்க மக்கள் பொது இடங்களில் கூடவும் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகள், ஆலைகள், வணிக நிறுவனங்கள், சிறு குறு நிறுவனங்கள், சாலையோர கடைகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
கரோனா வைரஸின் அச்சுறுத்தல் சமூகத்தின் அனைத்து பிரிவுகளையும் பாதித்திருந்தாலும், நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு விவசாயிகளை அதிகம் பாதித்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக, கடும் பொருளாதார நெருக்கடிக்குள்ளாகி இருக்கும் தெலங்கானா விவசாயிகள் விளைவித்த காய்கறிகள், பழங்களை விற்க முடியாமலும், உரிய விலை கிடைக்காமலும் பறிதவித்து வருகின்றனர். ஊரடங்கால் பாதிக்கப்படுள்ள தெலங்கானா விவசாயிகள், தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பிற்கேற்ப இழப்பீடு வழங்கவும், விவசாயிகள் பெற்றுள்ள கடன் முழுவதையும் நிபந்தனையின்றி தள்ளுபடி செய்திட மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி வருகின்றனர்.
-
Called on Hon'ble Governor of Telangana Her Excellency @DrTamilisaiGuv, along with Shri @RaoMlc and Shri @TigerRajaSingh and submitted a memorandum raising concerns related to the farmers of Telangana.@TelanganaGuv pic.twitter.com/S2QXHUIIV2
— Bandi Sanjay Kumar (@bandisanjay_bjp) April 27, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Called on Hon'ble Governor of Telangana Her Excellency @DrTamilisaiGuv, along with Shri @RaoMlc and Shri @TigerRajaSingh and submitted a memorandum raising concerns related to the farmers of Telangana.@TelanganaGuv pic.twitter.com/S2QXHUIIV2
— Bandi Sanjay Kumar (@bandisanjay_bjp) April 27, 2020Called on Hon'ble Governor of Telangana Her Excellency @DrTamilisaiGuv, along with Shri @RaoMlc and Shri @TigerRajaSingh and submitted a memorandum raising concerns related to the farmers of Telangana.@TelanganaGuv pic.twitter.com/S2QXHUIIV2
— Bandi Sanjay Kumar (@bandisanjay_bjp) April 27, 2020
இது தொடர்பில் உரிய நடவடிக்கையை மாநில அரசு முன்னெடுக்க அழுத்தம் தர வேண்டுமென வலியுறுத்தி பாஜகவைச் சேர்ந்த தெலங்கானா சட்டப்பேரவை மேலவை உறுப்பினர் ராம்சந்தர் ராவ், கட்சியின் மூத்தத் தலைவர்கள் பண்டி சஞ்சய் குமார், ராஜா சிங் ஆகியோருடன் இணைந்து இந்த கோரிக்கை மனுவை தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனிடம் அளித்துள்ளனர்.
அதில், “கோவிட்-19 ஊரடங்கு காரணமாக விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை தீர்க்க தகுந்த நடவடிக்கைகள் எடுக்க மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும். விவசாயிகள் துயரத்தைப் போக்க, அவர்கள் விளைவித்த பயிர்களை அரசாங்கம் கொள்முதல் செய்ய முன் வரவேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க : 'மருத்துவ உபகரணங்களை மத்திய அரசு உடனடியாக வழங்கவேண்டும்'