ETV Bharat / bharat

தெலங்கானா ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள் மூவருக்கு கரோனா! - தெலங்கானா எம்எல்ஏ கரோனா

ஹைதராபாத்: தெலங்கானா ராஷ்டிரிய சமிதியைச் சேர்ந்த மூன்று சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

TRS MLAs Telangana COVID news TRS MLAs test positive TRS Telangana news தெலங்கானா தெலங்கானா எம்எல்ஏ கரோனா telangana mla corona
டிஆர்எஸ் எம்எல்களுக்கு கரோனா தொற்று
author img

By

Published : Jun 16, 2020, 12:45 PM IST

நிஷாம்பாத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பிக்லா கணேஷ் குப்தாவுக்கு கரோனா தொற்று நேற்று உறுதியானது.

மூன்று நாள்களுக்கு முன்பு ஜங்கன் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் முத்திரெட்டி யாதக்ரி ரெட்டிக்கு கரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்; பின்பு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார்.

கடந்த ஞாயிறன்று நிஷாம்பாத் கிராமப்புறத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பஜிரெட்டிக்கு கரோனா தொற்று உறுதியானது. இந்த மூன்று சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் தொடர்பிலிருந்தவர்களைக் கண்டறிந்து தனிமைப்படுத்தும் பணியில் அம்மாநில சுகாதாரத் துறை அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தெலங்கானா ஆளுங்கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்கள் மூவருக்கு கரோனா தொற்று உறுதியான சம்பவம் மற்ற சட்டப்பேரவை உறுப்பினர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: 950 மரணங்களை மறைக்கும் மகாராஷ்டிரா: பட்னாவிஸ் பகீர் புகார்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.