ETV Bharat / bharat

பிகார் மனிதச் சங்கிலி: காங்கிரஸ், ஆர்.ஜே.டி. எதிர்ப்பு

பாட்னா: பிகாரில் மனிதச் சங்கிலி நிகழ்வை பதிவுசெய்ய ஹெலிகாப்டர்களை வாடகைக்கு எடுத்து பொதுமக்களின் பணத்தை வீணடித்துவிட்டதாக முதலமைச்சர் நிதிஷ் குமார் மீது ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவர் தேஜஷ்வி யாதவ் குற்றஞ்சாட்டினார்.

Tejashwi Yadav tears into Bihar CM for using copters to videograph human chain event

author img

By

Published : Jan 19, 2020, 11:23 PM IST

ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவர் தேஜஷ்வி யாதவ், பிகாரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் மீது குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்தார். செய்தியாளர்கள் சந்திப்பின்போது தேஜஸ்வி யாதவ் கூறும்போது, “பிகார் மாநிலத்தில் கடுமையான வேலையின்மை உள்ளது. ஆனால் மனிதச் சங்கிலி நிகழ்வை படமாக்க ஹெலிகாப்டர்களை வாடகைக்கு எடுத்து முதலமைச்சர் நிதிஷ் குமார் கோடிக்கணக்கான பணத்தை செலவிட்டுள்ளார். இதுமட்டுமா? இந்தக் கடுங்குளிரிலும் பள்ளிக் குழந்தைகள் காலில் காலணிகூட அணியாமல் நிற்கவைக்கப்பட்டுள்ளனர்” என்றார்.

பிகார் அரசு இன்று (ஜனவரி 19ஆம் தேதி) மனிதச் சங்கிலி நிகழ்ச்சியொன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சியில் பல மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பங்கேற்றனர். பிகார் அரசு 2017ஆம் ஆண்டு மதுவிலக்கு கொள்கைக்கு ஆதரவாகவும், 2018ஆம் ஆண்டு வரதட்சணைக்கு எதிராகவும் இதுபோன்ற நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தது.

ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவர் தேஜஷ்வி யாதவ் பேட்டி
பிகார் அரசின் மனிதச் சங்கிலி நிகழ்ச்சிக்கு காங்கிரசும் தனது எதிர்ப்பைப் பதிவுசெய்துள்ளது. பித்தலாட்டம், மூளை இல்லையா? எனவும்
காங்கிரஸ் கட்சியினர் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்தாண்டு நீர், வாழ்க்கை, பசுமை என்ற கருப்பொருளை மையப்படுத்தி மனிதச் சங்கிலி நடந்தது.

இதையும் படிங்க : நெகிழிக்கு எதிராகக் களம்கண்டுள்ள இளம் பிகார் போராளிகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.