உத்தரப் பிரதேச மஹோபா மாவட்டத்தில் 17 வயதுடைய இளம்பெண்ணை இரு இளைஞர்கள் காட்டுப் பகுதிக்குள் கடத்தி சென்றுள்ளனர். பின்னர் அந்த இளம்பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர்.
இது குறித்து தகவலறிந்த மாதாந்து காவல் துறையினர், அந்த பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய அந்த இரு இளைஞர்களையும் தேடி வருகின்றனர்.
இதுகுறித்து மாதவுந்த் காவல் நிலைய துணை ஆய்வாளர் சுல்தான் சிங் கூறுகையில், "இளம்பெண்ணை எதோ காரணம் சொல்லி அழைத்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் நேற்று மாலை 5 மணிக்கு நிகழ்ந்துள்ளது. இது குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறோம்” என்றார்.
இதையும் படிங்க...வீட்டில் சகோதரியின் சடலத்துடன் ஒரு வாரம் தங்கியிருந்த அண்ணன்: இத்தாலியில் அவலம்