கரோனா தொற்று பரவி வரும் காலத்தில், முகக்கவசம் என்பது அனைவருக்கும் கட்டாயம் என்ற நிலை ஆகிவிட்டது. முகக்கவசத்தின் அவசியத்தை அரசும் மருத்துவர்களும் வலியுறுத்தி வரும் நிலையில், தன்னார்வலர் ஒருவர் ஒருபடி மேலேபோய் தனது வாடிக்கையாளர்களுக்கு விலையில்லாமல் முகக்கவசத்தை கொடுத்து வருகிறார். ஆம்.
குஜராத் மாநிலம், வதோதரா பகுதியில் தேநீர் கடை உரிமையாளர் சப்பன்மச்சி என்பவர், தனது வாடிக்கையாளர்களுக்கு கரோனா குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்காக ஒரு தேநீருடன் இலவச முகக்கவசத்தை விநியோகிக்கிறார். இது அப்பகுதி மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
இதுகுறித்து சப்பன்மச்சி கூறுகையில், "இதுவரை, நான் 650-க்கும் மேற்பட்ட முகக்கவசங்களை வாடிக்கையாளர்களுக்கு விலையில்லாமல் விநியோகித்துள்ளேன். கரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் வரும் வரை தொடர்ந்து இந்த விழிப்புணர்வை செய்வேன்" என்றார்.