ETV Bharat / bharat

கை நழுவிப் போனதா சந்திரபாபு நாயுடுவின் கனவு?

மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி பின்னடைவை சந்தித்துவருகிறது.

சந்திரபாபு நாயுடு
author img

By

Published : May 23, 2019, 1:52 PM IST

2014ஆம் ஆண்டு ஆந்திரப்பிரதேசத்தில் இருந்து, தெலங்கானா என்ற புதிய மாநிலம் பிரிக்கப்பட்டது. அதற்கிடையே நடைபெற்ற 16ஆவது மக்களவைத் தேர்தலில் புதிய இந்தியாவை உருவாக்க, ஊழல் இல்லா நல்லாட்சி மலர தாமரை சின்னத்துக்கு வாக்களியுங்கள் என, வெள்ளை நிற தாடியுடன் இந்தியாவின் ட்ரெண்ட் செட்டராக பாஜக சார்பில் களமிறங்கினார் நரேந்திர மோடி. இத்தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தெலுங்கு தேசம் கட்சியும் இடம்பெற்றிருந்தது.

இந்தத் தேர்தலுடன் தெலங்கானா, ஆந்திரப்பிரதேசம் ஆகிய இரு மாநில சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் ஆந்திரா மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தை பெற்றுத் தருவோம் என்ற வாக்குறுதியுடன் களம் கண்டது சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி.

தொடர்ந்து பத்து ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியால் அதிருப்தி அடைந்த மக்கள் பாஜக தலைமையிலான கூட்டணிக்கு உற்சாகத்துடன் வாக்களித்தனர். இந்தத் தேர்தலில் மக்களவையில் எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை பெற, பிடிக்க வேண்டிய 55 இடங்களில் கூட காங்கிரஸ் வெற்றி பெறவில்லை. வெறும் 44 தொகுதிகளை கைப்பற்றி படுதோல்வி அடைந்தது காங்கிரஸ்.

ஆந்திரா மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து பெறுவது உள்ளிட்ட விவகாரங்களில் பாஜகவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து 2018ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் விலகினார் சந்திரபாபு நாயுடு.

இதையடுத்து, பாஜக அல்லாத கட்சியை மத்தியில் ஆட்சி அமைக்க அமர்த்தும் முயற்சியில் ஈடுபட தொடங்கினார் சந்திரபாபு நாயுடு. 2018ஆம் ஆண்டு நடைபெற்ற தெலங்கானா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரசுன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். இத்தேர்ததில் படுதோல்வியை சந்தித்தது காங்கிரஸ் - தெலுங்கு தேசம் கட்சிகளின் கூட்டணி.

இத்தோல்வியை அடுத்து சுதாரித்துக்கொண்ட இரு கட்சிகளும் மக்களவைத் தேர்தலில் தேர்தலுக்கு முந்தைய கூட்டணி அமைக்க வேண்டாம் என முடிவு செய்தன.

இது ஒருபுறமிருக்க பாஜக அல்லாத கட்சியை அரியாசனத்தில் அமர வைக்கும் திட்டம் அவரை விட்டு நீங்கவில்லை. இதனால் காங்கிரஸ், திருணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட தேசிய கட்சிகளையும், ஆம் ஆத்மி, சமாஜ்வாதி, திமுக உள்ளிட்ட மாநில கட்சிகளையும் இணைக்கும் முனைப்புடன் பல அரசியல் கட்சி தலைவர்கள் அவர் தொடர்ந்து சந்தித்து வந்தார்.

இதனிடையே, 17ஆவது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏழு கட்டங்களாக கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி முதல் மே 19ஆம் தேதி வரை விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இத்தேர்தலுடன் ஆந்திரப்பிரதேச சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.

இதில் தற்போதைய நிலவரப்படி ஆந்திரப்பிரதேசத்தில் மொத்தமுள்ள 25 தொகுதிகளில் ஒரு இடத்தில் மட்டுமே தெலுங்கு தேசம் கட்சி முன்னிலை வகித்துவருகிறது.

அதே போல அம்மாநில சட்டப்பேரவை தேர்தலிலும் மொத்தமுள்ள 175 தொகுதிகளில் 24 இடங்களில் மட்டுமே தெலுங்கு தேசம் முன்னிலையில் உள்ளது.

பிரதான எதிர்க்கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வெற்றியின் படிகட்டில் வேகமாக முன்னேறிவருகிறது. தனது முன்முயற்சியில் ஓர் பிரதமரை அரியானத்தில் அமர வைக்கும் யுக்தியில் ஈடுபட்டுவரும் சந்திரபாபுவுக்கு இது பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதனால், மத்தியில் பாஜக அல்லாத ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்ட அவர், மாநிலத்தில் தீவிரம் காட்ட தவற விட்டார் என்ற விமர்சனமும் எழாமல் இல்லை.

Intro:Body:

dummy

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.