தெலுங்கு தேசம் கட்சியின் ராஜ்ய சபா உறுப்பினரான சி.எம் ரமேஷின் சகோதரர் மகன் தர்மா ராம். இவர் இந்த ஆண்டு 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வை எழுதியுள்ளார்.
இதன் முடிவுகள் ஏப்ரல் 18 ஆம் தேதி வெளியானது. இதில் ஒரு பாடத்தில் அவர் தோல்வியடைந்துள்ளார். இதனால் மனமுடைந்த தர்மா ராம் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.