இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தெலுங்கு தேசம் கட்சி சார்பில் 'மகாநாடு' மாநாடு நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில், கரோனா பெருந்தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், இந்த ஆண்டு நடைபெறயிருந்த 'மகாநாடு' மாநாட்டை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.
இதுகுறித்து விரிவான ஆலோசனை மேற்கொண்ட கட்சித் தலைமை காணொலிக் காட்சி மூலம் மாநாட்டை நடத்த முடிவெடுத்தது.
அதன்படி, ஸூம் செயலி மூலம் நேற்று தொடங்கிய 'மகாநாடு' மாநாடு இன்று வரை நடைபெறவுள்ளது.
மாநாட்டில் கலந்துகொண்ட 14 ஆயிரத்துக்கும் அதிகமான தொண்டர்கள் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவிடம் உரையாடினர். மாநாட்டில், 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தனை ஆயிரம் நபர்களைக் கொண்டு, ஒரு கட்சியின் காணொலி மாநாடு நடப்பது இந்தியாவில் இதுவே முதல்முறையாகும்.
இதையும் படிங்க : நான் இருக்கேன்; இந்தியா - சீனா மத்தியஸ்தத்திற்கு முன்வந்த ட்ரம்ப்