ETV Bharat / bharat

கரோனா: ரூ. 1,500 கோடி நிதியுதவி அறிவித்த டாடா!

டெல்லி: கோவிட்-19 வைரஸ் தொற்றுக்கு எதிராக போராட ரூ. 1,500 கோடி நன்கொடை வழங்குவதாக டாடா நிறுவனம் அறிவித்துள்ளது.

Tata
Tata
author img

By

Published : Mar 28, 2020, 6:51 PM IST

Updated : Mar 28, 2020, 7:25 PM IST

கோவிட்-19 வைரஸ் தொற்றின் தாக்கம் இந்தியாவில் நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. இந்தியாவில் இதுவரை 918 பேருக்கு கோவிட்-19 வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 79 பேருக்கு சிகிச்சை நிறைவடைந்துள்ளது.

வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தவும் வைரஸ் குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும் இந்தியர்கள் அனைவரும் தங்களால் முடிந்த நிதியை பிரதமர் நிவாரண நிதிக்கு அளிக்கலாம் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். பொதுமக்கள் நிதியளிக்க வேண்டிய வங்கி கணக்குத் தொடர்பான தகவல்களும் பகிரப்பட்டுள்ளன.

Tata
நிதியுதவி அளிக்க வேண்டிய கணக்குகள்

இந்நிலையில், பிரதமரின் கரோனா தடுப்பு நிவாரண நிதிக்கு ரூ.500 கோடி வழங்குவதாக டாடா அறக்கட்டளை அறிவித்துள்ளது. இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் ரத்தன் டாடா வெளியிட்டுள்ள அறிக்கையில், "இப்போது நாம் சந்தித்துவரும் கோவிட் 19 வைரஸ் நெருக்கடி என்பது மனித இனமான நாம் எதிர்கொள்ளும் மிகக் கடினமான சவால்களில் ஒன்று.

கடந்த காலங்களில் தேசம் பெரும் பிரச்னைகளைச் சந்திக்கும்போதெல்லாம் டாடா நிறுவனம் உறுதுணையாக இருந்துள்ளது. இப்போதைய தேவை என்பது வேறெப்போதையும்விட அதிகமாக உள்ளது. இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த உதவியாக ரூ. 500 கோடியை டாடா நிறுவனம் வழங்கவுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

  • The COVID 19 crisis is one of the toughest challenges we will face as a race. The Tata Trusts and the Tata group companies have in the past risen to the needs of the nation. At this moment, the need of the hour is greater than any other time. pic.twitter.com/y6jzHxUafM

    — Ratan N. Tata (@RNTata2000) March 28, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இது பாதுகாப்பு உபகரணங்களையும் வெண்டிலேட்டர்களையும் வாங்க உதவியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், டாடா சன்ஸ் நிறுவனம் மேலும் ஆயிரம் கோடி ரூபாயை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

ரத்தன் டாடா அறிவித்த ரூ.500 கோடி டாடா சன்ஸ் நிறுவனத்தின் ரூ. 1,000 கோடி என மொத்தம் 1,500 கோடி ரூபாயை கரோனா நிவாரண நிதிக்கு டாடா நிறுவனம் வழங்கியுள்ளது.

இதையும் படிங்க: கரோனா நிவாரண நிதி - ரூ.50 லட்சம் வழங்கிய முதலமைச்சர் நாராயணசாமி

Last Updated : Mar 28, 2020, 7:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.