மத்திய அரசுப் பணிகளில் தமிழர்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டு வருவதாகக் கூறி, தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு காலிப்பணியிடங்களுக்கு வெளிமாநிலத்தவர்கள் அதிக அளவில் பணியமர்த்தப்படுவதைக் கண்டித்து திருச்சி பொன்மலையில் தமிழ்த் தேசிய பேரியக்கம் சார்பில் இன்று போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்தின் எதிரொலியாக சமூக வலைதளங்களில் ‘#தமிழகவேலைதமிழருக்கே #TamilnaduJobsForTamils’ என்ற இரண்டு ஹேஷ்டேகுகளும் ட்ரெண்டாகி வருகிறது. அண்மையில்கூட திருச்சி பொன்மனையில் ரயில்வே துறையில் அப்ரண்டீஸ் எனப்படும் பழகுநர் பணிக்காக நடந்த நேர்காணலில் 1765 பேரில் வெறும் 100 தமிழர்கள் என்றளவிலேயே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதிலும் வெற்றிபெற்ற 325 பேரில் ஒருவர்கூட தமிழர் இல்லை. அனைவருமே வடமாநிலத்தவர்களும், கேரளாவைச் சேர்ந்தவர்களும் என்பது குறிப்பிடத்தக்கது.