தெலங்கானா, கேரளா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டார். அதன்படி, தெலங்கானாவின் புதிய ஆளுநராக தமிழ்நாடு பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் நியமிக்கப்பட்டார். இதனால், ஆளுநராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தமிழ்நாட்டு பெண்மணி என்ற பெருமையையும், தெலங்கானாவின் முதல் பெண் ஆளுநர் என்ற பெருமையையும் தமிழிசை பெற்றுள்ளார்.
இந்நிலையில், தெலங்கானாவின் புதிய ஆளுநராக தமிழிசை நாளை பதவியேற்கவுள்ளார். இதற்கான ஏற்பாடுகள் தெங்கானா ஆளுநர் மாளிகையில் தயார்நிலையில் உள்ளது. தமிழிசை பதவியேற்பு விழாவில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் பன்னீர்செல்வமும் கலந்துகொள்வதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தெங்கானா மாநிலத்தின் அமைச்சரவையும் நாளை விரிவாக்கம் செய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.