17ஆவது மக்களவை கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான இன்று, தமிழ்நாடு எம்.பி.க்கள் பதவியேற்றுக் கொண்டனர். தமிழ்நாடு எம்.பி.க்கள் அனைவரும் தமிழில் பதவியேற்றனர். இதில் பெரும்பான்மையானவர்கள் ‘தமிழ் வாழ்க’ என்ற முழக்கத்துடன் தங்களின் உறுதிமொழியை நிறைவு செய்தனர்.
தமிழ்நாடு எம்.பி.க்கள் ‘தமிழ் வாழ்க’ என முழங்கியது நம் நெட்டிசன்கள் கண்ணில் பட, ட்விட்டரில் அதனை இந்திய அளவில் நம்பர் 1-ஆக ட்ரெண்ட் செய்துள்ளனர்.