2017ஆம் ஆண்டுக்கான குற்றங்கள் குறித்த அறிக்கையை தேசிய குற்ற ஆவண காப்பகம் நேற்று வெளியிட்டது. கலவரங்களின் வீரியம் தமிழ்நாட்டில்தான் அதிகம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பது பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கலவரங்களால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில்தான் அதிகம் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் 1,935 கலவரங்கள் நடைபெற்றுள்ளது. இதில், 18,749 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சராசரியாக தமிழ்நாட்டில் நடைபெறும் ஒரு கலவரத்தில் 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2017ஆம் ஆண்டு, 3.28 விழுக்காடு கலவரங்கள் தமிழ்நாட்டில்தான் நடைபெற்றுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் நடக்கும் கலவரங்களால் நாடு முழுவதும் 21 விழுக்காடு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அமைதியான மாநிலமாக பஞ்சாப் திகழ்ந்துவருகிறது. 2017ஆம் ஆண்டு அங்கு ஒரு கலவரம்தான் நடைபெற்றது. 2016ஆம் ஆண்டை காட்டிலும் 2017ஆம் ஆண்டு மதக்கலவரங்கள், சாதியக்கலவரங்கள் நாட்டில் குறைந்துள்ளது.
இதையும் படிங்க: பெண்களுக்கு எதிரான வன்முறை: உத்தரப் பிரதேசம் முதலிடம்!