புரட்டாசி மாதம் கடைசி சனிக்கிழமை அனைத்து பெருமாள் கோயில்களிலும் இன்று சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. பக்தர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கோயில்களில் சாமி தரிசனம்செய்தனர்.
அந்த வகையில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று (அக். 10) திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அமைச்சர்களுடன் சென்று சாமி தரிசனம்செய்தார்.
பின்னர், ரங்கநாயகி மண்டபத்தில் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோருக்கு பிரசாதம், நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன.
இதையும் படிங்க: புரட்டாசி கடைசி சனி: பக்தர்களுக்கு காட்சியளித்த நித்யகல்யாணப்பெருமாள்!