இதுதொடர்பாக இன்று ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள வாடஸ்ஆப் செய்திக் குறிப்பில், “அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் இன்று ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் என் மீதும் மற்றவர்கள் மீதும் பலவித குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். இருப்பினும் இந்த குற்றச்சாட்டுகள் புதுச்சேரிக்கு அர்ப்பணிப்புடன் சேவை செய்வதில் எந்தவிதமான கவனச்சிதறலையும் ஏற்படுத்தாது.
இந்த நெருக்கடி நேரத்தில், புதுச்சேரி மக்களுக்கு அவரது முதல் முன்னுரிமையாக வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தை உறுதி செய்வதில் கவனம் செலுத்த வேண்டும்.
மனித இடர்பாடுகளையும் மற்றும் பொருளாதார இழப்புகளையும் குறைக்க நிர்வாகத்தை ஒட்டுமொத்தமாக வலுப்படுத்துவதே அளுநர் மாளிகையின் உறுதிபாடாகும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.