ETV Bharat / bharat

'கரோனா பரவலில் தப்லீக் ஜமாத்தினர் பலிகடாவாக்கப்பட்டனர்' - உயர் நீதிமன்றம் காட்டம்

author img

By

Published : Aug 23, 2020, 7:33 AM IST

Updated : Aug 23, 2020, 8:06 AM IST

மும்பை : கரோனா பரவலுக்கு இடையே தப்லீக் ஜமாத்தினர் பலிகடாவாக்கப்பட்டதாகவும், அவர்களுக்கு எதிராக ஊடகங்களிலும் தவறான பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் மும்பை உயர் நீதிமன்றம் விமர்சித்துள்ளது.

Tablighi foreigners were made scapegoats

டெல்லியில் கடந்த மார்ச் மாதம் தப்லீக் ஜமாத் சார்பில் மிகப் பெரிய மாநாடு நடைபெற்றது. இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து இஸ்லாமியர்கள் சென்று கலந்து கொண்டனர். அதேபோல், வெளிநாடுகளில் இருந்து வந்த இஸ்லாமியர்களும் இம்மாநாட்டில் பங்கேற்றனர்.

அதனைத் தொடர்ந்து மார்ச் இறுதி வாரம் தொடங்கி நாட்டில் கரோனா பரவல் அதிகரித்தது. இந்நிலையில், கரோனா பரவலுக்கு தப்லீக் ஜமாத்தினர்தான் காரணம் என அரசு அலுவலர்கள் தொடங்கி ஊடகங்கள் வரை அனைவராலும் பரவலாக செய்திகள் வெளியிடப்பட்டன. அதைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநில அரசுகள் தப்லீக் ஜமாத்தினருக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் தொடங்கின.

அதன்படி விசா விதிமுறைகளையும், தொற்றுநோய் சட்ட வழிகாட்டுதல்களையும் மீறியதாக 29 வெளிநாட்டினர் மீது மகாராஷ்டிர காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். அதேபோல அவர்கள் தங்க அடைக்கலம் அளித்தாக ஆறு இந்தியர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதை எதிர்த்து அவர்கள் அனைவரும் மும்பை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக நேற்று (ஆக. 22) நடைபெற்ற விசாரணையில் பேசிய உயர் நீதிமன்ற நீதிபதிகள், "ஒரு பெருந்தொற்று அல்லது பேரழிவு ஏற்படும்போது அரசியல் சார்புடைய அரசு யாரை பலிகடாவாக ஆக்கலாம் என்றே தேடுவார்கள். அந்த வகையில், இந்த விஷயத்தில் இவர்கள் (வெளிநாட்டைச் சேர்ந்த தப்லீக் ஜமாத்தினர்) பலிகடாவாக்கப்பட்டனர்.

வெளிநாட்டினரும் இந்திய முஸ்லீம்களும் நாட்டில் தேவையற்ற எந்தவித சிக்கல்களையும் உருவாக்க முயலவில்லை. ஆனால், அவர்களுக்கு எதிராகதான் தேவையற்ற சிக்கல்கள் உருவாக்கப்பட்டன. ஊடகங்களும் நாட்டில் கரோனா பரவலுக்கு இந்த வெளிநாட்டினர்தான் காரணம் என்ற மிகப் பெரிய ஒரு தவறான பரப்புரையை மேற்கொண்டன" என்றனர்.

மேலும், முஸ்லீம்கள், தப்லீக் ஜமாத்தினர் குறித்து பொது மக்கள் மத்தியில் ஏற்பட்ட களங்கத்தை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், "ஒரு அரசு, அனைத்து மதத்தினரையும் ஒன்று போல நடத்த வேண்டும். ஒவ்வொரு மதத்தை பின்பற்றுபவர்களையும் ஒவ்வொரு மாதிரி நடத்தக் கூடாது. சமூக மற்றும் மத சகிப்புத்தன்மை என்பது இந்தியாவின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் இன்றியமையாததாகும். இது இந்திய அரசியலமைப்பால் கட்டாயமாக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தனர்.

இந்திய இஸ்லாமியர்களை எச்சரிக்கும் வகையில் அரசின் நடவடிக்கைகள் உள்ளதாக தெரிவித்த நீதிபதிகள், "2020ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கு முன் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்றன. இந்தப் போராட்டங்களில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானோர் இஸ்லாமியர்கள். குடியுரிமை திருத்தச் சட்டம் முஸ்லிம்களுக்கு பாரபட்சம் காட்டுவதாகக் கருதி அவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.

தற்போது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக, அந்த முஸ்லிம்களின் மனதில் மேலும் அச்சம் ஏற்பட்டுள்ளது. மறைமுகமாக எந்த வடிவத்திலும் எந்த நடவடிக்கையும் முஸ்லிம்களுக்கு எதிராக எடுக்கப்படும் என்று இந்திய முஸ்லிம்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் இவை (அரசு நடவடிக்கைகள்) உள்ளன.

மற்ற நாடுகளில் உள்ள முஸ்லிம்களுடன் தொடர்பில் இருந்தால்கூட அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைக் காட்டும் வகையிலேயே இது உள்ளது. இதேபோன்ற நடவடிக்கைகள் மற்ற மதங்களைச் சேர்ந்த பிற வெளிநாட்டவர்கள் மீது எடுக்கப்படவில்லை" என்றனர்.

அரசியல் அழுத்தம் காரணமாக தப்லீக் ஜமாத்தினர் மீது மகாராஷ்டிர அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்த நீதிபதிகள், அவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகளை ரத்து செய்தும் உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அடுத்த மாதத்திற்குள் தீர்ப்பு

Last Updated : Aug 23, 2020, 8:06 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.