ETV Bharat / bharat

'தேசத்தை தட்டியெழுப்பி விட்டீர்கள்' - ஜாமியா பல்கலை மாணவர்களுக்கு நடிகை பாராட்டு - ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகம்

டெல்லி: குடியுரிமை திருத்தச் சட்டம் (சி.ஏ.ஏ.) விவகாரத்தில் நாட்டை தட்டியெழுப்பிவிட்டீர்கள் என ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்களுக்கு நடிகை ஸ்வரா பாஸ்கர் பாராட்டு தெரிவித்தார்.

Swara Bhasker lauds Jamia students for waking up entire nation against CAA

author img

By

Published : Jan 2, 2020, 8:13 AM IST

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு நாடு முழுக்க எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதற்கு எதிராக மாபெரும் அளவில் போராட்டத்தை ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்தனர்.

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு நடிகை ஸ்வரா பாஸ்கர் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “நாங்கள் தாமதமாக விழித்தோம். ஆனால் விழித்துவிட்டோம். குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக நாடு முழுக்க விழிப்புணர்வூட்டி நீங்கள் நாட்டை தட்டியெழுப்பிவிட்டீர்கள்“ எனக் கூறினார்.

மேலும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை இந்திய அரசியலமைப்பு மீதான தாக்குதல் எனவும் அவர் கூறினார். அமித் ஷாவின் 'துக்டே துக்டே கேங்' என்ற விமர்சனத்துக்கும் அவர் பதிலளித்தார்.

குடியுரிமை திருத்தச் சட்டம் ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து அகதிகளாக வெளியேறிய சிறுபான்மையின இந்துக்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்டவர்களுக்கு எளிதில் குடியுரிமை கிடைக்க வழிவகை செய்கிறது.

இதையும் படிங்க: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கோலம் போட்ட திருமாவளவன்!

Intro:Body:

Swara Bhasker lauds Jamia students for waking up entire nation against CAA

Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.