ETV Bharat / bharat

சுப்ரமணியன் சுவாமியின் இஸ்லாமிய வெறுப்பு பேச்சு: ஐ.நா சிறப்பு ஆலோசகர் கண்டனம்

author img

By

Published : May 22, 2020, 2:56 PM IST

டெல்லி: மாநிலங்களவை உறுப்பினர் சுப்ரமணியன் சுவாமி இஸ்லாமியர்கள் மீது வெறுப்பைக் கக்கும் விதமாக பேசியது சர்வதேச மனித உரிமைகள் விதிமுறைகள், மதிப்புக்கு எதிரானது என இனப்படுகொலை தடுப்புக்கான ஐ.நா. சிறப்பு ஆலோசகர் அடாமா டயங் தெரிவித்துள்ளார்.

Subramanian Swamy  UN human rights official  Swam's Muslim comments  United Nations  சுப்ரமணிய சுவாமி  இனப்படுகொலை தடுப்புக்கான ஐநா சிறப்பு ஆலோசகர் அடாமா டயங்  swami muslim hate speech  சுவாமியின் இஸ்லாமிய வெறுப்பு பேச்சு
சு. சுவாமியின் இஸ்லாமிய வெறுப்பு பேச்சு: கண்டித்த ஐ.நா உரிமை ஆர்வலர்

பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சுப்ரமணியன் சுவாமி, கடந்த மாதம் வாய்ஸுக்கு(அமெரிக்காவை அடிப்படையாக கொண்ட கனடியர் டிஜிட்டல் ஊடகம் மற்றும் ஒளிபரப்புத்துறை நிறுவனம்) அளித்தபேட்டியில், இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி இஸ்லாமியர்கள் மற்றவர்களுக்கு சமமானவர்கள் அல்ல என்றும் 30 விழுக்காட்டிற்கு மேல் இஸ்லாமியர்களின் மக்கள் தொகை அதிகமானாமல் நாட்டிற்கு ஆபத்து என்றும் பேசியுள்ளார்.

இந்தப் பேட்டியின் வீடியோ வெளியான பின், இஸ்லாமியர்கள் மீது சுப்ரமணியன் சுவாமி வெறுப்பை கக்குகிறார் என்று பல்வேறு மனித உரிமை ஆர்வலர்கள் தங்களது கண்டனங்களைத் தெரிவித்தனர். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, யூதர்களை நாசிக்கள் பேசியது போல் இந்தியாவிலுள்ள 200 மில்லியன் இஸ்லாமியர்களைப் பற்றி சுப்பிரமணியன் சுவாமி பேசியுள்ளார் என்றும் இவ்வாறு பேச ஆர்.எஸ்.எஸ் ஊக்கப்படுத்துகிறது என்றும் தெரிவித்திருந்தார்.

இந்தப்பேட்டி ஒளிபரப்பான பின்பு ஐ.நா. மனித உரிமை ஆர்வலர்கள் பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்தனர். இனப்படுகொலை தடுப்புக்கான ஐ.நா. சிறப்பு ஆலோசகர் அடாமா டயங்(Adama Dieng), கடந்த திங்களன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், சுப்ரமணியன் சுவாமி பேசியருப்பது மிகவும் ஆபத்தானது. வெறுப்பு பேச்சு மனிதநேயமற்றது என்றும் அவரின் பேச்சு சர்வதேச மனித உரிமைகளின் விதிமுறைகள் மற்றும் மதிப்புகளுக்கு எதிரானது என்றும் தெரிவித்திருந்தார். மேலும், இனப்படுகொலைக்கான தொடக்கம் வெறுப்பு பேச்சே என்றும் தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தில் இஸ்லாமியர்கள் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்க ஆவண செய்திருப்பது சர்வேத மனித உரிமைச் சட்டத்திற்கு எதிரானது என தெரிவித்த அவர், குடியுரிமை திருத்தச் சட்டத்தின் நோக்கம் சிறுபான்மை சமூகத்தின் பாதுகாப்பு என்பது வரவேற்கத்தக்கது என்றாலும் அது இஸ்லாமியர்கள் உள்பட மற்ற குழுக்களுக்கு நீட்டிக்கப்படாதது பாகுபாடு கட்டப்படுவதை காட்டுகிறது எனவும் தெரிவித்திருந்தார்.

இது குறித்து பேசிய சுப்ரமணியன் சுவாமி, தான் வாய்ஸ் நிறுவனத்திற்கு வழங்கிய முழு நீளப்பேட்டியின் வீடியோ காட்சியை அந்நிறுவனத்திடம் கேட்டதாகவும் அவர்கள் தரமறுத்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தனது பேட்டி வெட்டி, ஒட்டப்பட்டு வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 'குடிபெயர் தொழிலாளர்களுக்கு தானியம் மட்டுமல்ல, பணமும் தேவை'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.