இந்த ஆண்டு அக்டோபர் 27ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்படவிருக்கிறது. தீப ஒளித் திருநாள் என்று சொல்லப்படும் தீபாவளி இந்தியா முழுவதும் உள்ள இந்துக்களால் பரவலாகக் கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாகும். இந்த பண்டிகையின்போது மக்கள் தங்கள் வீடுகளை அகல் விளக்குகளின் தீபங்களால் அலங்கரிப்பார்கள்.
தற்போது தீபாவளிக்கு தேவையான பட்டாசு, புத்தாடை, போன்றவற்றை மக்கள் வாங்கிவரும் சூழ்நிலையில் வீடுகளை அலங்கரிக்கத் தேவையான அகல் விளக்குகளையும் வாங்கி வருகின்றனர்.
இந்நிலையில், விற்பனைக்காக ஹைதராபாத்தில் களிமண்ணால் செய்யப்பட்ட ஜாடிகள், பாட்டில்கள் மற்றும் பானைகள் போன்ற வடிவிலான விளக்குகள் குவித்து வைக்கப்பட்டுள்ளன.
இது மக்களைப் பெரிதும் கவரும் வகையில் இருக்கிறது. களிமண்ணால் செய்யப்பட்ட இந்த அலங்கார விளக்குகளின் விலை மலிவாக இருப்பதாலும்; இவை சுற்றுச்சுழலுக்கு தீங்கு விளைவிக்காது என்பதாலும் மக்கள் இதனை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.
இதையும் படிங்க: டெங்கு காய்ச்சலுக்கு 5 வயது சிறுவன் பலி!