ETV Bharat / bharat

இன்று வெளியாகிறது அயோத்தி தீர்ப்பு...! - நாடு முழுவதும் உஷார் நிலை

author img

By

Published : Nov 8, 2019, 9:39 PM IST

Updated : Nov 9, 2019, 11:20 AM IST

டெல்லி: சர்ச்சைக்குரிய அயோத்தி நிலம் தொடர்பான வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இன்று காலை 10.30-க்கு வழங்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகிவுள்ளது.

அயோத்தி

நாடே பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சர்ச்சைக்குரிய ராம ஜென்ம பூமி - பாபர் மசூதி நிலம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகவுள்ளது. இவ்வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தொடர் விசாரணையை மேற்கொண்டது.

40 நாள் விசாரணை அக்டோபர் 16ஆம் தேதி முடிவடைந்ததைத் தொடர்ந்து, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வரும் நவம்பர் 17ஆம் தேதி ஓய்வுபெறவுள்ள நிலையில், அதற்கு முன்பு தீர்ப்பு வெளியாகும் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது.

மேலும், நாடு முழுவதும் சட்ட ஒழுங்கை சீராக வைத்துக்கொள்ள தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், உத்தரப் பிரதேச மாநில காவல் துறைத் தலைவர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை சந்தித்து நிலைமை குறித்து விளக்கமளித்தார்.

இந்நிலையில், அயோத்தி சர்ச்சை நிலம் தொடர்பான வழக்கின் இறுதி தீர்ப்பானது இன்று காலை 10.30-க்கு வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. தீரப்புக்குப்பின் கொண்டாட்டமோ துக்கமோ அனுசரிக்கும்விதத்தில் எந்தவித செயல்களிலும் ஈடுபடக் கூடாது எனக் காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வன்முறையைத் தூண்டும்விதமாக பேசவோ, கருத்திடவோ, புகைப்படமிடவோ, காணொலியோ வெளியிடக் கூடாது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி தொடங்கி, ஆளும் பாஜக தலைவர்கள், ஆர்எஸ்எஸ் அமைப்பினர் என பல்வேறு தரப்பைச் சேர்ந்த முன்னணி தலைவர்கள் அனைவரும் நீதிமன்ற தீர்ப்பை மதித்து அனைத்து தரப்பினரும் அமைதி காக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தமிழ்நாட்டிலும் காவல் துறையினர் உஷார் நிலையில் உள்ளனர். மேலும், சமூக வலைதளங்களை சைபர் கிரைம் காவல் துறையினர் தீவிரமாக கண்காணித்துவருகின்றனர்.

இதையும் படிங்க ‘சிவசேனா பாஜகவை அவமதிக்கிறது’ - ராஜினாமா செய்தபின் பட்னாவிஸ் குற்றச்சாட்டு

Intro:Body:

Supreme Court to deliver verdict on Ayodhya matter tomorrow.

Conclusion:
Last Updated : Nov 9, 2019, 11:20 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.