ஊரடங்கின்போதும், ஊரடங்குக்குப் பின்னும் இருக்க வேண்டிய நீதிமன்ற செயல்பாடுகள் குறித்த பரிந்துரைகளை, நீதிபதி எல்.என்.ராவ் அடங்கிய நீதிபதிகள் குழு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டேவிடம் சமர்ப்பித்தது. இந்நிலையில், தலைமை நீதிபதி பாப்டே உச்ச நீதிமன்றத்திற்கு மே, 18ஆம் தேதி தொடங்கும் ஏழு வார கால கோடை விடுமுறை ரத்து செய்யப்பட்டு, அந்நாட்களில், காணொலி மூலம், வழக்குகள் விசாரிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
நீதிபதிகள் குழுவின் பரிந்துரையை ஏற்று, அவ்விடுமுறை ரத்து செய்யப்படுகிறது. ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு, இந்த நாள்களில் மூன்று நீதிபதிகளுடன் காணொலி மூலம் வழக்குகளை விசாரிக்கும்.
இதையும் படிங்க: 'விஞ்ஞானத்தில் மிஞ்சிய மனிதகுலம்... வைரஸைக் கையாள திணறுகிறது’