வெளிநாடுகளில் புழக்கத்திலிருந்தாலும் இந்தியா கிரிப்டோகரன்சி மற்றும் மெய்நிகர் நாணய வர்த்தகப் பயன்பாட்டிற்குத் தடைவிதித்திருந்தது. இது தொடர்பாகச் சுற்றறிக்கையை வெளியிட்டது.
ரிசர்வ் வங்கியின் இந்தச் சுற்றறிக்கைக்கு எதிராக இந்திய இணையம் மற்றும் மொபைல் சங்கம் தாக்கல்செய்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் ரோஹிண்டன் ஃபாலி நாரிமன், ரவீந்திர பட், வி. ராமசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய அமர்வு அத்தகைய தடையை நீக்கி இந்திய ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கையை ரத்துசெய்தது.
இதனால் பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோகரன்சியில் வர்த்தகம் செய்ய சட்டப்பூர்வ சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் 2018 சுற்றறிக்கைக்கு எதிரான ரிட் மனுக்கள் விகிதாச்சாரத்தின் அடிப்படையில் அனுமதிக்கப்பட்டுள்ளன என்று உச்ச நீதிமன்றம் கூறியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: டெல்லி கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க எதிர்ப்பு: பாஜக பிரமுகரின் மனு தள்ளுபடி