உச்ச நீதிமன்ற வரலாற்றில் முதன்முறையாக ஓய்வுபெறும் நீதிபதிக்கு வீடியோ கான்பரன்ஸ் மூலம் பிரியாவிடை கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் குப்தா இன்று ஓய்வுபெற்றார். அவருக்குப் பிரியாவிடை கொடுக்க நினைத்த உச்ச நீதிமன்ற பார் அசோசியேஷன், ஜும் ஆஃப் மூலம் ஒன்றிணைந்து அவரை வழியனுப்பி வைத்தனர். இதில், வழக்கறிஞர்கள், நீதிபதிகள், செய்தியாளர்கள், அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே. வேனுகோபால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய நீதிபதி குப்தா, ”எனது 42 வருட நீதிமன்ற வாழ்வு இன்றுடன் நிறைவடைகிறது. நீதிபதிகளுக்கு அரசியலமைப்பு புத்தகமே புனித நூல். நீதிபதிகள் அனைவரும் தங்களது சொந்த மதத்தை மறந்துவிட்டு, அரசியலமைப்பை மட்டுமே சார்ந்து தீர்ப்பு வழங்க வேண்டும்.
நான் ஒரு தன்னார்வலராக இருந்துபோதிலும் நீதிமன்றத்தில் அதனை வெளிப்படுத்தியது இல்லை. நீதிபதியாக இருப்பவர் தனது எண்ண ஓட்டத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். ஒரு நல்ல வழக்கறிஞராக இருக்க வேண்டுமெனில் முதலில் நல்ல மனிதராக இருக்க வேண்டும். பார் அசோசியேஷன் மனுதாரர்களிடம் அதிகளவில் பணம் வசூலிக்காமல் மனிதாபிமானத்துடன் நடத்துகொள்ள வேண்டும்” என்றார்.
இதையும் பார்க்க: 'கரோனாவை இஸ்லாமியர்கள் பரப்புகிறார்கள் என்ற கருத்தில் உண்மையில்லை' - ஆர்எஸ்எஸ்