அயோத்தி வழக்கின் 40 நாள் விசாரணை அக்டோபர் 16ஆம் தேதி முடிவடைந்ததைத் தொடர்ந்து, நவம்பர் 9ஆம் தேதி தீர்ப்பு வெளியிடப்பட்டது. சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் ராம் லல்லாவுக்குச் சொந்தம். அங்கு ராமர் கோயில் கட்டலாம். மசூதி கட்டிக்கொள்ள இஸ்லாமியர்களுக்கு அயோத்தியிலேயே 5 ஏக்கர் மாற்று இடம் வழங்கப்படும் எனத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அனைத்திந்திய இஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியம், ஜாமியத் உலமா ஹிந்த் அமைப்பு, அமைதிக்கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுக்களை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது. இந்நிலையில், தாக்கல் செய்யப்பட்ட 18 மனுக்களையும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ். ஏ. பாப்டே தலைமையிலான அமர்வு தள்ளுபடி செய்துள்ளது. இதில் இந்து அமைப்பினரும் மறு சீராய்வு மனுவை தாக்கல் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இந்தியாவின் மருத்துவ காப்பீட்டுத் திட்டங்கள்!