புதுச்சேரியில் நடைபெற்ற சண்டே மார்க்கெட் வியாபாரிகள் சங்கக் கூட்டத்தில் பல்வேறு முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றபட்டுள்ளன. இக்கூட்டத்திற்கு ஏஐடியுசி மாநில பொதுச்செயலாளர் சேது செல்வம் தலைமை தாங்கினார்.
முன்னதாக சண்டே மார்க்கெட் திறப்பது குறித்து முதலமைச்சரை பத்துக்கும் மேற்பட்ட முறை சங்கத்தினர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியும், சண்டே மார்க்கெட்டைத் திறப்பதற்கான எந்த அறிவிப்பும் அரசு தரப்பில் இருந்து வெளியிடப்படவில்லை.
சமீபத்தில் நாடு முழுவதும் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, அனைத்து வகையான கடைகளும் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சமூக இடைவெளியைப் பின்பற்றி சண்டே மார்க்கெட்டிலும் கடை வைத்து வியாபாரம் செய்வதற்கு அரசு அனுமதிக்க வேண்டும் எனக் கோரி, அதனை வலியுறுத்தி வருகிற செப்டம்பர் 30ஆம் தேதி முதல் சட்டப்பேரவை முன்பு தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக அச்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.