பத்ம பூஷண் விருதுப் பெற்ற திரையிசை பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் மறைவை ஒட்டி ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பிரபல மணற்சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் பூரி கடற்கரையில் அவரது உருவம் பதித்த மணற் சிற்பத்தை செதுக்கினார்.
இதில், 1948-2020 ஆம் ஆண்டை குறிப்பிட்டு ஜாம்பவான் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்கு அஞ்சலி என்ற வாசகம் குறிப்பிட்டிருந்தது.
இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட பிரம்மாண்ட மணல் சிற்பங்களை உருவாக்கியுள்ள அவர் மறைந்த பாடகர் எஸ்பிபியின் மணல் சிற்பத்தை, சுமார் 3 மணி நேரத்தில் கடும் உழைப்பில் உருவாக்கியுள்ளார்.
இந்த மணல் சிற்பம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.