புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி புதுச்சேரியில் இயங்கிவரும் பாரதி, சுதேசி ஆகிய மில்களை மூட வேண்டும் என புதுச்சேரி அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.
தேர்தல் நன்னடத்தை விதி அமலில் உள்ள நிலையில் துணைநிலை ஆளுநர் கிரண் பேடி இரண்டு பஞ்சாலைகளில் மூடும்படி உத்தரவிட்டிருப்பது தேர்தல் விதிமுறைகளை மீறிய செயல் என புதுச்சேரி மாணவர் கூட்டமைப்பு தலைவர் சுவாமிநாதன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும் இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த சுவாமிநாதன் கூறியதாவது:
துணைநிலை ஆளுநர் கிரண் பேடி தேர்தல் விதிகளை மீறியது குறித்து தேர்தல் துறைக்கு கடிதம் எழுதியுள்ளோம். அதில், கிரண் பேடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுச்சேரி மாணவர் கூட்டமைப்பின் சார்பாக வலியுறுத்தியுள்ளோம் என கூறினார்.