ETV Bharat / bharat

அண்டை மாநிலங்களால் தேசிய தலைநகரில் அதிகரிக்கும் காற்று மாசு

அண்டை மாநிலங்களில் எரிக்கப்படும் பசுமைக் கழிவுகளால் தேசிய தலைநகர் பகுதிகளில் 40 விழுக்காடு காற்று மாசு அதிகரித்துள்ளதாக புவி அறிவியல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

author img

By

Published : Nov 2, 2020, 10:44 AM IST

Stubble burning contributing 40% to Delhi's pollution

டெல்லி: புவி அறிவியல் அமைச்சகத்தின் காற்று தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு ஆராய்ச்சி (SAFAR) வெளியிட்டுள்ள தகவலின்படி, டெல்லியைச் சுற்றியுள்ள அண்டை மாநிலங்களான பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் எரிக்கப்படும் பண்ணைக் கழிவுகளால் டெல்லி, தேசிய தலைநகர் பகுதிகளில் தொடர்ந்து காற்றின் தரம் குறைந்து வருகிறது.

கடந்த சனிக்கிழமை மட்டும் பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் மூன்றாயிரத்து 216 பண்ணைக் கழிவு எரிப்பு பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன.

இதனால் காற்றின் தரம் மேலும் 40 விழுக்காடு குறைந்துள்ளது. இருப்பினும், கடந்த இரு தினங்களில் காற்றின் தரம் ஓரளவு முன்னேறிய தன்மையுடனே உள்ளதாகத் தெரிகிறது.

செயற்கைக்கோள் வெளியிட்டுள்ள படத்தின் அடிப்படையில், அதிகளவு பண்ணை கழிவுகள் எரிப்பு நடந்துவருவது தெரிகிறது. மேலும், குளிர்காலம் காரணமாகவும் டெல்லியில் காற்றின் தரம் குறைந்து வானத்தில் மூடுபனி நீடித்து வருகிறது எனத் தெரிவித்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.